சர்ச்சை புகழ் மீரா மிதுனின் ஜாமீன் மீண்டும் தள்ளுபடி

தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் மீரா மிதுன்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 06:36 PM IST
சர்ச்சை புகழ் மீரா மிதுனின் ஜாமீன் மீண்டும்  தள்ளுபடி title=

சென்னை: நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை யூடியூப்பில் வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு, அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Meeramithun

இந்நிலையில் 2-வது முறையாக அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மீரா மிதுன் உள்ளிட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்க போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் ஏ.சத்யா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணைக்கு பின்பு, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நட்சத்திர ஹோட்டல் மேலாளரை மிரட்டிய வழக்கில் மீரா மிதுன் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.  தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுமட்டுமல்லாது பல்வேறு சர்ச்சைகளை கிளப்புவதில் மீரா மிதுன் கில்லாடி என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ நடிகை கீர்த்தி சுரேஷிற்கு 3 வயதில் மகனா? வைரலாகும் புகைப்படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News