Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Bigg Boss Tamil Season 7: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று முதல் (அக்டோபர் 1) ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே நடைபெற்ற 6 சீசன்களை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் தொகுப்பாளராக வருவார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 1, 2023, 08:25 AM IST
  • பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1 முதல் ஒளிபரப்பாகிறது.
  • ஏழாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
  • பிரமாண்ட வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்! title=

பிக்பாஸ் தமிழின் புதிய சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. பிக்பாஸ் தமிழ் ஏழாவது பதிப்பு அக்டோபர் 1 இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை வெளியான புரமோக்களின் படி இந்த வருடம் பிக்பாஸ் வீட்டில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.  பிக்பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தினசரி எபிசோடுகள் இரவு 9.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். மேலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொள்ளலாம்.  மற்ற ஆண்டுகளை போல் இல்லாமல், இந்த ஆண்டு கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!

இந்த ஆண்டு, பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.  வழக்கம் போல பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள போவது இவர்கள் தான் என்று சமூக வலைத்தளங்களில் பலரது பெயர்கள் சுற்றி திரிந்தன.  இந்நிலையில், நேற்று பிக்பாஸ் ஆரம்பமானது.  வீட்டிற்குள் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சென்றுள்ளனர்.  இந்த வருடம் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்பதை இப்பொது பார்க்கலாம்.

ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் போட்டியில் பங்கேற்று உள்ளனர்.  கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீனன் மிகவும் காரசாரமாக நடைபெற்றது.  அசீம் போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.  

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News