‘பிக் பாஸ் தமிழ்’ புகழ் ஆயிஷாவுக்கும் பேஷன் போட்டோகிராபர் ஹரன் ரெட்டிக்கும் திருமணம்

Bigg Boss Ayesha Engagement: தொலைக்காட்சி நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளருமான ஆயிஷா, ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியை மணக்கவிருக்கிறார்... திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2023, 12:03 PM IST
  • காதலரை கரம் பிடிக்க முடிவு செய்த பிக்பாஸ் ஆயிஷா
  • பிக்பாஸ் பிரபலத்தின் திடீர் நிச்சயதார்த்தம்
  • ஆயிஷாவை மணக்கும் ஹரன் ரெட்டி
‘பிக் பாஸ் தமிழ்’ புகழ் ஆயிஷாவுக்கும் பேஷன் போட்டோகிராபர் ஹரன் ரெட்டிக்கும் திருமணம் title=

பிக்பாஸ் சீசன் 6இல் பங்கெடுத்துக் கொண்டு பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகை ஆயிஷா. ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியுடன் தனது திருமணத்தை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ஆயிஷா பகிர்ந்துள்ளார். அவர்களுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. தம்பதிகளுக்கு, ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர். 
 
‘பிக் பாஸ் தமிழ்’ புகழ் ஆயிஷா திருமண நிச்சயதார்த்தம்
'பிக் பாஸ் தமிழ் 6' புகழ் அய்ஷாத் ஜீனத் பீவி,வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டார். பிக்பாஸில் கலந்துக் கொண்ட நடிகை ஆயிஷாவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், மொத்தம் 12.50 லட்சம் சம்பளம் வாங்கினார் என்ற தகவல்களும் சுவாராசியத்தை ஏற்படுத்தியது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayshath Zeenath Beevi A P S (@aayesha6_official)

நடிகை ஆயிஷா, ஹரன் ரெட்டியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஹரன் ரெட்டிக்கும், ஆயிஷாவுக்கும் பிப்ரவரி 14ம் நாள், காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விழாவில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை ஆயிஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்த செய்தியை, தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதோடு, ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். வீடியோவிற்கு, "நிச்சயமாக இது எங்கள் விருப்பமான பிரேம்" என்று ஆயிஷா பெயரிட்டுள்ளார்..

ஆயிஷா 2018 இல்,'பொன்மகள் வந்தாள்' மூலம் தமிழில் தனது டிவி வாழ்க்கையைத் தொடங்கினார். 'ரெடி ஸ்டெடி போ' என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் அவர் சத்யா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். இந்த சீரியல், விமர்சகர்களால் பாராட்டப்பட்டது மற்றும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டது.

மேலும் படிக்க | Jailer Teaser: வந்தாச்சி ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்...குஷியில் ரஜினி ரசிகர்கள்

ஃபேஷன் ரியாலிட்டி ஷோ சூப்பர் குயின் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்துக் கொண்ட ஆயிஷா, நிகழ்ச்சியின் 2வது ரன்னர் அப் ஆனார். பின்னர் ஆயிஷா பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் பங்கேற்றார்.

ஆயிஷா தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக இருந்த சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தில் கதாநாயகியாக ஆயிஷா நடித்துள்ளார்.
 
அதோடு, குடும்பம் விருதுகள் (2021) திரைப்படத்திற்காக ஆயிஷா சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரை ஜோடிக்கான விருதையும் வென்றார். குடும்பம் விருதுகள் (2020) படத்திற்காக அவர் பலருக்கும் பிடித்த கதாநாயகி விருதையும் வென்றார்.

மேலும் படிக்க | லிப் லாக் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய அனிகா சுரேந்திரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News