Bigg Boss தமிழ் சீசன் 4 இல் வருகிறாரா இந்த ‘ஷகலக பேபி’ நடிகை? May be…..

வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட போதிலும், அந்த போராட்டத்திலும் நம்மை மகிழ்விக்க, நம்மை திசை திருப்ப பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி, சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் ‘Bigg Boss’ நிகழ்ச்சி பற்றிய செய்தி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 02:23 PM IST
  • Bigg Boss சீசன் 4-ல் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் புயலாக வீசிக்கொண்டிருக்கின்றது.
  • Bigg Boss சீசன் 4 அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • பிரபல நடிகை, பாடகி வசுந்தரா தாஸ் Bigg Boss வீட்டிற்குள் வரப்போவதாகக் கூறப்படுகிறது.
Bigg Boss தமிழ் சீசன் 4 இல் வருகிறாரா இந்த ‘ஷகலக பேபி’ நடிகை? May be….. title=

கொரோனா காலத்திலும் சில விஷயங்கள் நம் சிந்தையைக் கவர தவறுவதில்லை. என்னதான் வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட போதிலும், அந்த போராட்டத்திலும் நம்மை மகிழ்விக்க, நம்மை திசை திருப்ப பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி, சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் ‘Bigg Boss’ நிகழ்ச்சி பற்றிய செய்தி.

உலக நாயகன் கமல் (Kamal Haasan) தொகுத்து வழங்கும் இந்த ரியாலிடி ஷோ (Reality Show), தமிழக மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு நிகழ்ச்சியாகும். இதற்கு ஆதரவாக, எதிராக என மக்கள் இரு பக்கங்களாக பிரிந்திருந்தாலும், இதை யாராலும் புறக்கணிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

ALSO READ: Bigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!!

Bigg Boss வீட்டிற்கு வருகிறாரா வசுந்தரா தாஸ்?

Bigg Boss சீசன் 4-ல் (Bigg Boss Season 4) கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் புயலாக வீசிக்கொண்டிருக்கின்றது. இந்த பட்டியலில் இருப்பவர்கள்தான் அனேகமான இந்த ஆண்டு Bigg Boss சீசன் 4-ல் கலந்துகொள்ளப் போகிறவர்கள் என நம்பப்பட்டாலும், இதில் சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்தும் வருகின்றனர். புதிதாக சில பெயர்கள் பற்றியும் பேச்சு அடிபடுகிறது.

அப்படி பேசப்படும் ஒருவர்தான் தமிழின் பிரபல நடிகையும் பாடகியுமான வசுந்தரா தாஸ் (Vasundara Das). இதுவரை எந்த பட்டியலிலும் இவரது பெயர் வராத நிலையில், ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ஒரு ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’-ஆக இருக்கும்.

Singer Vasundhara Das files a case against a cab driver | Kannada Movie  News - Times of India

பூனம் பாஜ்வா, கிரண் போன்ற நடிகைள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசுந்தராவின் வருகை எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். இவர் தமிழில் இரண்டே படங்களில்தான் நடித்திருந்தாலும், தன் வித்தியாசமான அழகு மற்றும் அற்புதமான நடிப்பால் மக்கள் மனதில் இன்னும் இடம் பெற்றிருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த இந்த நடிகைக்கு 42 வயதாகிறது.

இவர் அஜித்துடன் (Ajith) நடித்த ‘சிட்டிசன்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. கமலுடன் ‘ஹே ராம்’ படத்தில் இவரது கதாபாத்திரம் மனதில் நின்ற கதாபாத்திரங்களில் ஒன்று என்றே கூறலாம்.

கதாநாயகியாக இவர் இப்படங்களில் நடித்தாலும், தமிழ் திரை உலகில் அதற்கு முன்னரே இவர் அறிமுகமாகிவிட்டார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், முதல்வன் படத்தின் பிரபலமான ‘ஷகலக பேபி’ பாடலை பாடியவர் வசுந்தரா தாஸ்தான்.

இவர் Bigg Boss வீட்டிற்குள் வந்தால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் இவரைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அக்டோபர்-4 துவங்குகிறதா Bigg Boss-4?

Bigg Boss சீசன் 4 அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியெனில், அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், யார் யார் Bigg Boss வீட்டிற்குள் செல்லப் போகிறார்கள் என்பது பற்றி இன்னும் பல ஊகங்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.

போட்டியாளர்களுக்கு COVID டெஸ்ட்

இதற்கிடையில் Bigg Boss வீட்டிற்குள் செல்லும் அனைவருக்கும் COVID  பரிசோதனை (COVID Test) செய்யப்பட்டு, முடிவுகள் எதிர்மறையாக வந்தால் மட்டுமே அவர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்து Bigg Boss எப்படி இருக்கும்? இந்த சீசனில் வரும் போட்டியாளர்களை ரசிகர்கள் எவ்வாறு ஆதரிக்கப்போகிறார்கள்? ஆரவாரம், கேளிக்கை, சதி, காதல், நட்பு, துரோகம் என அனைத்து மனித இயல்புகளையும் படம் போட்டுக் காட்டும் Bigg Boss வீடு இந்த சீசனில் நமக்குக் காட்டப்போகும் விஷயங்கள் என்னென்ன?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் எங்கள் வலைதளத்தில் அவ்வப்போது விடை அளித்துக்கொண்டே இருப்போம். Bigg Boss சீசன் 4-ஐ எங்களோடு இணைந்து பாருங்கள். சேர்ந்து மனித மனங்களை ஆராயலாம்! இதயங்களை புரிந்து கொள்ளலாம்! பாடங்கள் பல கற்கலாம்!!

Watch this space for more on Bigg Boss Season 4!! 

ALSO READ: Bigg Boss தமிழ் சீசன் 4 இல் அந்த பிரபலம் பங்கேற்கவில்லை...வெளியான தகவல்...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News