விஜய் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் 'பீஸ்ட்' படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படம் குறித்த ஒவ்வொரு தகவல்களையும் பலரும் வலைவீசி தேடி கொண்டு இருக்கின்றனர். இப்படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குது பாடல் வெளியானதில் இருந்து இன்று வரை கொரோனா அலை போல் அரபிக்குத்து பாடலின் அலை ஓய்ந்தபாடில்லை. எங்கு பார்த்தாலும் ஹலமதி அபிபூ தான் ஒலித்து கொண்டு இருக்கின்றது, சிறுவர் முதல் பெரியவர் வரை பலரும் இப்பாடலிற்கு ரீல்ஸ் செய்து பாடலை டிரெண்டாக்கி வருகின்றனர். இப்பாடல் வெளியான வெறும் 20 நாட்களிலேயே யூடியூபில் 125 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை தாண்டி சாதனை படைத்துவிட்டது.
மேலும் படிக்க | விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? சஸ்பென்ஸ் உடைத்த ஜீவி பிரகாஷ்!
தற்போது இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்து இருக்கிறது. அதாவது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிராம்மணடமாக சென்னையில் மார்ச் 20ம் தேதி நிகழ இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் என்ன பேச போகிறார்? எதை பற்றி பேச போகிறார்? என்பதை கேக்க தான் பலரும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்வதற்கான அனுமதி சீட்டுக்களை ரசிகர்களுக்கு விநியோகிப்பதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புலி, மாஸ்டர் மற்றும் பிகில் போன்ற படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்தபோது விஜய் பேசிய விஷ்யங்கள் பலவும் பலரது கவனத்தை ஈர்த்தது. இவர் கூறிய பன்ச் டயலாக்குகளும் ரசிகர்கள் மத்தியிலு ட்ரெண்டானது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து எதுவும் பேசுவாரா? என்று பலரும் தற்போதே விவாதிக்க தொடங்கிவிட்டனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இந்த ஆண்டு ஆடியோ லான்ச் எங்கு நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR