தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பள்ளிக் கூட நிர்வாகி ஒருவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வந்து அமுதாவிடம் வாங்க சொல்கிறார். செந்திலும் மாணிக்கமும் பழனி & கோவை கிண்டல் செய்கின்றனர். பழனி கரசிடம் காமராஜரை பத்தி பேசி ஜெயிச்சிட்டா என கோபப்படுகிறான்.
அதை தொடர்ந்து அமுதா வெற்றி பெற்றவுடன் கதிரேசன் அவள் முன் தோன்ற, அமுதா நான் ஜெயிச்சிட்டேன் என சொல்லி சந்தோஷப்பட நல்லவங்க ஜெயிக்க கொஞ்ச கால தாமதம் ஆகும், கடைசில நல்லவங்க தான் ஜெயிப்பாங்க, என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு என சொல்கிறார்.
மறுபக்கம் உமா பழனியிடம் இன்னும் கொஞ்ச நேரத்துல அவ கரசாகப் போறா, என்னால தாங்க முடியாது என சொல்ல, குமரேசன் அது நடக்காது என சொல்கிறார்.
அதற்கேற்ப வெற்றி பெற்ற சான்றிதழை அமுதா வாங்கப் போகும் சமயம் வக்கீல் ஒருவர் வந்து தேர்தல்ல முறைகேடு இருக்குன்னு ஸ்டே ஆர்டர் வாங்கிட்டாங்க, சட்டப்படி இந்த தேர்தல் செல்லாது என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
கரஸ் குமரேசனிடம் கோர்ட்டுல இருந்து ஜட்ஜ் இன்னும் கொஞ்ச நேரத்துல வரப் போறாரு, விசாரிச்சாருன்னா நியாயம் அவங்க பக்கம் தான இருக்கும் என சொல்ல, ஜட்ஜ் வருவாரு, தீர்ப்பை சொல்லுவாரு ஆனா அவர் சொல்லப் போற தீர்ப்பு நமக்கு சாதகமாத்தான் இருக்கும், அதுக்கு அவரை பணம் குடுத்து வாங்கியாச்சு என சொல்ல கரஸ் சந்தோஷப்படுகிறார். பள்ளி நிர்வாகி ஒருவர் அதை கேட்டு விடுகிறார்.
பிறகு அமுதா அன்னலட்சுமியிடம் தர்மம் நம்ம பக்கம் தான் இருக்கு, நாம தான் ஜெயிப்போம் என சொல்லிக் கொண்டிருக்க பள்ளி நிர்வாகி கரசும் குமரேசனும் பேசியதை அமுதாவிடம் சொல்கிறார்.
அமுதா பள்ளி நிர்வாகிகளிடம் எப்படி தேர்தல் முறைகேடு நடந்துச்சுன்னு சொல்லுங்க என கேட்க அமுதா அவர்களிடம் அவங்க தீர்ப்பை முன்னாடி எழுதி வச்சுட்டு ஜட்ஜை கூட்டிட்டு வர்றாங்க என சொல்ல ஜட்ஜ் வந்து விசாரிச்சாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம் என்று சொல்கின்றனர்.
பிறகு ஜட்ஜ் வந்து இறங்க, அமுதா அது செந்திலை கோர்ட்டில் வைத்து எக்சாம் எழுத சொன்னவர் என்பது தெரிய வருகிறது. மாணிக்கம் செந்திலும் நிர்வாகிகளிடம் ஜட்ஜ் வரக் கூடாது என சொல்லிக் கொண்டிருக்க, அமுதா சித்தப்பா ஜட்ஜே வந்து தீர்ப்பு சொல்லட்டும் என சொல்லி ஜட்ஜை காட்ட மாணிக்கமும் செந்திலும் சந்தோஷமாகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ