பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் உயிரிழந்த 12 பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நிதியுதவி வழங்குவதை கண்டித்து மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவோயிஸ்ட் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:- உயிரிழக்கும் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கக் கூடாது, பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் பாதிக்கப்படும் மாவோயிஸ்ட்களுக்கு உதவுங்கள் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஹிந்தி மற்றும் கோண்டி எனும் பழங்குடியின மொழிகளில் எழுதப்பட்டுள்ள மிரட்டல் கடிதம், மாவோயிஸ்ட் அமைப்பின் 50வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டத்தையொட்டி, துண்டு பிரசுரமாக வழங்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.