அஜித்57: படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானது!

Last Updated : Aug 19, 2016, 05:33 PM IST
அஜித்57: படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானது! title=

அஜித்குமார், தனது புதிய படத்தில் நடித்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இது அஜித்குமாரின் 57-வது படமாகும். இதில் சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பில் அஜித்குமார் நடித்த காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

ரகசியமாக வைத்திருந்த அஜித்குமார் தோற்றம் இதன்மூலம் வெளிப்பட்டுவிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். காஜல் அகர்வாலும் இந்த படத்தில் நடித்தபோது எடுத்த சில படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்ததும் டைரக்டர் சிவா கோபமடைந்து காஜல் அகர்வாலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படங்களை டுவிட்டரில் இருந்து காஜல் அகர்வால் நீக்கி விட்டார்.

நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் புதிய படங்களின் கதை மற்றும் தோற்றங்களை ரகசியமாக வைத்து இருப்பது வழக்கம். ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது திருட்டுத்தனமாக அதை படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். இதனால் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் தோற்றம் ரசிகர்களுக்கு தெரியவந்தது. 

Trending News