நடிகர் சூர்யா வெளியிட்ட “ஜருகண்டி” படத்தின் டீசர்!!

ஜெய் மற்றும் ரேபா மோனிகா நடிக்கும் ஜருகண்டி படத்தின் டீசரை நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Last Updated : Feb 5, 2018, 08:00 PM IST
நடிகர் சூர்யா வெளியிட்ட “ஜருகண்டி” படத்தின் டீசர்!! title=

வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “ஜருகண்டி”. இந்த படத்தில் ஜெய் மற்றும் அவருக்கு மலையாள நடிகை ரேபா மோனிகா, ரோபோ சங்கர், மைம் கோபி, டேனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டெயின்மென்டு’ இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு “ஜருகண்டி” படத்தின் டீசரை நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

 

டீசர்:-

Trending News