ஜல்லிக்கட்டுக்கு அண்ணன்- தம்பி ஆதரவு!!

Last Updated : Jan 11, 2017, 01:48 PM IST
ஜல்லிக்கட்டுக்கு அண்ணன்- தம்பி ஆதரவு!! title=

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறுதழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வந்தது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.

திரைத்துறைய சேர்ந்த கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆதிக் ரவிச்சந்திரன், சூரி, விவேக், ஜீ.வி.பிரகாஷ், சின்மயி மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

கார்த்தி கூறியதாவது:- 

நடிகர் கார்த்தி தனது டுவிட்டரின் கவர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக காளையின் போட்டோ வைத்துள்ளார். 

சூர்யா கூறியதாவது:-

200 வகையான காளைகள் இருந்த நம் நாட்டில், இப்போது 30 வகை காளை கூட இல்லை என்கிறார்கள். அவைகள் அப்படியே அழிந்து கொண்டிருக்கின்றன, எப்படி நாம் பராமரிக்கப் போகிறோம் என்பது தான் எனது முதல் கேள்வியாக இருக்கிறது. ஏறுதழுவுதல் என்பது நமது கலாச்சாரத்தோடு, அடையாளத்தோடு சேர்ந்த ஒரு விஷயம். சட்டம் - ஒழுங்கு சேர்ந்து வரலாம். அதை தடை செய்யக் கூடாது என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.

விவேக் கூறியதாவது:-

தனது டுவிட்டர் பக்கத்தில்  ”நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கருணாஸ் கூறியதாவது:-

தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டி.ராஜேந்தர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தமிழகத்தில் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என உறுதியுடன் கூறினார்.

 

Trending News