வெந்து தணிந்தது காடு... 'மாநாடு' படத்தை 100 கோடி வசூல் லிஸ்ட்டுல போடு!

  டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து வெங்கட்பிரபு இயக்கிய நடிகர் சிம்புவின் மாநாடு ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்தது எனும் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2022, 01:19 PM IST
  • நடிகர் சிம்பு நடித்த மாநாடு கடந்த ஆண்டு வெளியானது
  • டைம் லூப் கான்செப்டில் வெங்கட்பிரபு இயக்கிய படம்
  • மாநாடு வசூல் நிலவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
வெந்து தணிந்தது காடு... 'மாநாடு' படத்தை 100 கோடி வசூல் லிஸ்ட்டுல போடு! title=

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் மாநாடு.

 'டைம் லூப்' எனும் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இப்படத்துக்கு வெங்கட் பிரபுவின் ஆதர்ஷ இசையமைப்பாளரான யுவன் இசையமைத்திருந்தார். நல்ல கவனத்தைப் பெற்ற இப்படம் நீண்ட நாட்களுக்குப் பின் சிம்புவுக்கு அமைந்த கம்பேக் படமாகவும் கூறப்பட்டது.

மாநாடு படம் தொடங்கப்படும்போதே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. சிம்பு நடிப்பாரா, படம் தொடர்ந்து எடுக்கப்படுமா எனும் கேள்விகள் தொடர்ந்துகொண்டிருந்தன. இதையெல்லாம் தாண்டி படம் உருவான நிலையில் அடுத்ததாகப் படத்தை ரிலீஸ் செய்வதிலும் சில சிக்கல்கள் எழுந்தன. 

அந்த வகையில் தொடக்கம் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் வரை என பல தடைகளைத் தாண்டித்தான் மாநாடு வெளியானது. படம் வெளியாகி சுமார் 6 மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படத்தின் வசூல் பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மாநாடு படம் 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?

மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. அதில் சிம்புவும் நடித்திருந்தார். ஆனால் அது மல்ட்டி ஸ்டாரர் படம் எனும் கேட்டகரியில் அமைந்தது. அந்த வகையில் பார்த்தால் சிம்பு தனிக் கதாநாயகனாக நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள முதல் படமாக மாநாடு திரைப்படம் அமைந்துள்ளது. இதனால் சிம்புவும் தற்போது 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க | விக்ரம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!- மலைக்க வைக்கும் பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News