மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்! அறிக்கையில் விளக்கம்

உடல்நல குறைவு காரணமாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சரத்குமார் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2022, 02:37 PM IST
மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்! அறிக்கையில் விளக்கம் title=

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சரத்குமார். ஸ்டார் அந்தஸ்தில் இருந்த சரத்குமார் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்சீரீஸ், திரைப்படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | Naai sekar returns: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் சரத்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்சத்து குறைப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரத்குமாருடன் நடிகையும், அவரது மனைவியுமான ராதிகாவும், மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் உடனிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும், மேற்கொண்டு சில பரிசோதனைகளும் எடுக்க வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. முழுமையான மருத்துவ சிகிச்சை முடிந்தபிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆவார். இது தொடர்பாக அவரது தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும்  நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: டபுள் எவிக்‌ஷன், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News