நடிகர் ஜீவா இனி 'ஆஹா' தொகுப்பாளர்

ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா  தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 29, 2022, 08:09 PM IST
  • ஓடிடி தளத்தில் ஆஹா ஓடிடி பல முன்னெடுப்புகளை எடுக்கிறது
  • ஆஹாவில் கேமிங் ஷோ தயாராக இருக்கிறது
  • அதை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்
நடிகர் ஜீவா இனி 'ஆஹா' தொகுப்பாளர் title=

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கிவரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா'எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.

டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.

Jiiva

இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பதுதான் விஷயம். தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களும், சந்தாதாரர்களும், புதிய வாடிக்கையாளர்களும் 'சர்க்கார் வித் ஜீவா'வைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

 

'சர்க்கார் வித் ஜீவா' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகர் அதர்வாவின் 'குருதி ஆட்டம்', ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனையை படைத்து வருகிறது.

மேலும் படிக்க | அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் ‘பார்டர்’; கதையை கேட்டால் அசந்துடுவீங்க!

இதற்கு முன் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான 'மாமனிதன்', 'ஜீவி', 'ஜீவி 2' என ஏராளமான திரைப்படங்கள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராஜா ராணி 2 சீரியலிலிருந்து அர்ச்சனா விலகியது ஏன்? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News