கடந்த 2016-ம் ஆண்டு நவம்பம் மாதம் வீடியோகான் (Videocon) மற்றும் டிஸ் டிவி(Dish TV) இடையே நிறுவனங்கள் இணைப்புக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி, தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டு நிறுவனங்களும் மார்ச் 22-ம் தேதி இணைந்தன.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்ததை அடுத்து நாட்டின் மிகப்பெரிய டிடிஎச் சேவை நிறுவனமாக வீடியோகான் நிறுவனம் உருவெடுத்துள்ளது. மேலும் டிடிஎச் சேவை இந்தியாவின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
டிஷ் டிவிக்கு 15.5 மில்லியன் வாடிக்கையாளர்களும், அதே நேரத்தில் வீடியோகான் டி2எச்-க்கு 12.2 மில்லியன் வாடிக்கையாளர்களும் இருந்தன.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்ததால் இந்தியா முழுவதும் வீடியோகான் நிறுவனத்தின் தற்போதைய மொத்தம் வாடிக்கையாளர்கள் 27.7 மில்லியன் ஆகும்.
டிஷ் டிவி மற்றும் வீடியோகான் டி2எச் தங்கள் தனி வருவாய் மற்றும் ஈபிஐடிடிஏ எண்களை வெளியிட்டுள்ளன, கடந்த நிதியாண்டில் (2017) ரூ. 60,862 மில்லியன் டிஷ் டிவியும் மற்றும் ரூ. 19,909 மில்லியன் வீடியோகான் டி2எச் வருவாய் ஈட்டி உள்ளது.