கணவனுக்கு அனுப்ப எடுத்த நிர்வாண வீடியோ FB-ல் லைவ் ஆனா கொடுமை!!

கணவனுக்கு அனுப்புவதற்காக எடுத்த நிர்வாண வீடியோ தவறுதலாக பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்ததால் பகீர்!!

Last Updated : Mar 17, 2019, 02:13 PM IST
கணவனுக்கு அனுப்ப எடுத்த நிர்வாண வீடியோ FB-ல் லைவ் ஆனா கொடுமை!! title=

கணவனுக்கு அனுப்புவதற்காக எடுத்த நிர்வாண வீடியோ தவறுதலாக பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்ததால் பகீர்!!

இன்றைய இளையதலைமுறைகளிடம் ஹீரோவாக திகழ்வது இணையதளம். இணையதளம் கத்தி முனை போன்றது. அதில், நல்லவையும் உண்டு, கேட்டவையும் உண்டு. அதை நாம் எடுத்துகொல்லும் விதத்தில் தான் அனைத்தும் உள்ளது. தற்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல அநீதியான சம்பவங்கள் நிகழ்கின்றது. நாம் நமது வாழ்க்கைத்துணையை விட்டு எவ்வளவு தூரமாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் அந்த இடைவெளியை மறக்க வைப்பது சமூக ஊடகங்கள் தான். சமூக வலைதளங்கள் சமூக சீரழிவுக்கு துணை போகும் கருவிகளாக சில சமயங்களில் மாறி வருகின்றன. 

இந்நிலையில், பல்கேரியாவில் கணவனுக்கு அனுப்புவதற்காக நிர்வாண வீடியோ எடுத்த பெண் தவறுதலாக அதனை பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்ததால், அவரும் அவர் குடும்பத்தினரும் திகைத்துபோயுள்ளனர். 

வெளிநாட்டில் வேலை செய்யும் தனது கணவருக்கு தனது நிர்வாண வீடியோவை அனுப்ப நினைத்த பெண் ஒருவர், அதனை கை தவறுதலாக லைவ் ஸ்ட்ரீம் வீடியோவாக கொடுத்துள்ளார். அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்த 2000 பேருக்கு இந்த வீடியோ சென்று சேர்ந்துள்ளது. அவரது பேஸ்புக் பக்கத்தில், அவருடைய நண்பர்கள், அவருடைய குடும்பத்தார் மற்றும் அவரது 20 வயது மகனின் நண்பர்கள் பலரும் அந்த ஆபாச வீடியோவை பார்த்துள்ளனர்.

இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது. அவரது கணவன் அவளிடம் பேசமாட்டேன் எனக் கூறியுள்ளார். அவளது மகன், ஐந்து ஆண்டுகளுக்கு இனி வீட்டுக்கு வரப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தான் தெரியாமல் செய்த தவறு தனக்கு எந்தளவுக்கு ஆபத்தை விளைவித்துள்ளது என்பதை எண்ணி அந்த பெண்ணும், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு க்ளிக்கில் இப்படி ஒரு விபரீதம்  நிகழும் என்பதால், தொழில்நுட்பத்தை கையாளுவதில் அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வு தேவை என்பதை இந்த சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.

 

Trending News