Indian Railways: Confirm டிக்கெட் தொலைந்துவிட்டாலும் பயணிக்கலாம் தெரியுமா?

ரயில் பயணம் என்பது ஒரு சுகமான அனுபவமாகும். எனினும், பயணத்திற்கு முன்னால் திடீரென்று உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 04:33 PM IST
  • உங்கள் ரயில் டிக்கெட்டை நீங்கள் இழந்துவிட்டால், அதற்கு பதிலாக டூப்ளிகேட் ரயில் டிக்கெட்டை வாங்கி நாம் பயணிக்கலாம்.
  • இதற்கு கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
  • இரண்டாவது மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ .50 செலுத்தி டூப்ளிகெட் டிக்கெட்டை பெறலாம்.
Indian Railways: Confirm டிக்கெட் தொலைந்துவிட்டாலும் பயணிக்கலாம் தெரியுமா?   title=

Indian Railways Ticket: ரயில் பயணம் என்பது ஒரு சுகமான அனுபவமாகும். எனினும், பயணத்திற்கு முன்னால் திடீரென்று உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? உங்களால் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியுமா? இது ஒரு கடினமான கேள்வியாக இருந்தாலும், இதன் பதில் மிகவும் எளியதுதான். 

டூப்ளிகேட் ரயில் டிக்கெட்டை வாங்கலாம்

உங்கள் ரயில் டிக்கெட் எங்காவது தொலைந்துவிட்டால், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய பொதுவான விஷயம்தான் என்று ரயில்வேக்கும் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க இந்திய ரயில்வே (Indian Railway) தனது பயணிகளுக்கு ஒரு புதிய வசதியை அளிக்கிறது.

உங்கள் ரயில் டிக்கெட்டை நீங்கள் இழந்துவிட்டால், அதற்கு பதிலாக டூப்ளிகேட் ரயில் டிக்கெட்டை வாங்கி நாம் பயணிக்கலாம். இருப்பினும் இதற்கு கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

டூப்ளிகேட் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம்

இந்திய ரயில்வே வலைத்தளமான indianrail.gov.in இன் படி, முன்பதிவு சார்ட் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட / ஆர்ஏசி டிக்கெட் (Railway Ticket) காணாமல் போனால், அதற்கு பதிலாக, டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படுகிறது. ரயில்வேயின் கூற்றுப்படி, இதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

இரண்டாவது மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ .50 செலுத்தி டூப்ளிகேட் டிக்கெட்டை பெறலாம். இரண்டாம் வகுப்பிற்கு ரூ .100 செலுத்த வேண்டும். முன்பதிவு சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டின் இழப்பு பற்றிய தகவல்கள் கிடைத்தால், டிக்கெட்டின் 50% கட்டணத்தை செலுத்தி டூப்ளிகெட் டிக்கெட்டை பெற வேண்டும்.

இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

டூப்ளிகெட் டிக்கெட்டுகள் தொடர்பான இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ள மறக்காதீர்கள். 

ALSO READ: IRCTC: ரயில் பயணச்சீட்டில் இருக்கும் குறிச்சொற்களின் பொருள் தெரியுமா?

1. உங்கள் டிக்கெட் உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டாகவோ அல்லது ஆர்.ஏ.சி டிக்கெட்டாகவோ இருந்து, அது கிழிந்துவிட்டால், நீங்கள் ஒரு டூப்ளிகெட் டிக்கெட்டை பெற முடியும். இதற்கு, ரிசர்வேஷன் சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகு, பயணி மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை அளிக்க வேண்டும். ரிசர்வேஷன் சார்ட் தயார் செய்யப்படுவதற்கு முன்னர் விண்ணப்பித்தால், டிக்கெட் தொலைந்தால் பெறப்படும் தொகைதான் பொருந்தும்.

2. இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, காத்திருப்பு பட்டியலில் சேதமடைந்த டிக்கெட்டுகளுக்கு டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படாது.

3. இது தவிர, விவரங்களின் அடிப்படையில் டிக்கெட்டின் உண்மையான தன்மை மற்றும் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டால், சிதைந்த டிக்கெட்டுகளிலும் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

4. ஆர்ஏசி டிக்கெட்டுகளாக இருந்தால், முன்பதிவு சார்ட் (Reservation Chart) தயாரிக்கப்பட்ட பின்னர் எந்த டூப்ளிகெட் டிக்கெட்டும் வழங்கப்படாது. 

5. டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்பட்ட பின்னர் அசல் டிக்கெட்டும் கிடைத்து விட்டால், இரண்டு டிக்கெட்டுகளும் ரயில் புறப்படுவதற்கு முன்னர் ரயில்வே அதிகாரிகளுக்கு காட்டப்பட்டால், டூப்ளிகெட் டிக்கெட்டுக்கு செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படும். இருப்பினும் இதில் 5% தொகை கழிக்கப்படும். இது குறைந்தபட்சம் 20 ரூபாயாக இருக்கும்.

ALSO READ: IRCTC Booking Update: மோசடிகளை தடுக்க முக்கிய மாற்றம் விரைவில்.!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News