கடந்த ஒரு வருடமாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முதலீடுகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் செய்து வருகிறது.
இந்திய தொலை தொடர்பு துறையில் ஒரு புரச்சியை ஜியோ ஏற்படுத்தி உள்ளது எனக்கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.
அந்தவகையில், தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நெட்வொர்க்கை பலப்படுத்த வோடவோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார்.