இரட்டையர்களை மணந்த இரட்டையர்கள்: அதுல ஆச்சரியம் இல்லை…அதுல ஒரு ட்விஸ்ட்..!!!

இந்த இரட்டையர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். ஒரே விதமான உடை அணியும் பழக்கமுள்ளவர்கள். இதுவும் எல்லோரும் செய்வது தான். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..!!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2020, 12:44 PM IST
  • இந்த இரட்டையர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். ஒரே விதமான உடை அணியும் பழக்கமுள்ளவர்கள்.
  • ஓஹியோவின் ட்வின்ஸ்பர்க்கில் நடைபெற்ற 2018 இரட்டையர் தின விழாவில், இந்த இரு தம்பதிகளும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.
  • திருமணம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகிழ்ச்சி செய்தி வருகிறது.
இரட்டையர்களை மணந்த இரட்டையர்கள்: அதுல ஆச்சரியம் இல்லை…அதுல ஒரு ட்விஸ்ட்..!!! 	 title=

இரட்டையர்களான ஜோஷ் மற்றும் ஜெர்மி சாலியர்ஸ் ஆகியோரை, அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டைக் சகோதரிகள் பிரிட்டானி மற்றும் பிரியானா சாலியர்ஸ்  ஆகியோர் மணந்தனர்.

வெள்ளிக்கிழமை, இந்த இரண்டு இரட்டை தம்பதிகளும் தம்பதிகள் ‘பேபிவாட்ச்’ என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் அறிவிப்பை வெளியிட்டனர். அதைஅ கண்டு அனைவருக்கும் வியப்பு மேலிட்டது.

 இந்த இரட்டையர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். ஒரே விதமான உடை அணியும் பழக்கமுள்ளவர்கள். இதுவும் எல்லோரும் செய்வது தான். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..!!!

இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக உள்ளனர் என்பது தான். ஆம் உண்மைதான் இரண்டு ஜோடிகளும்  ஒரே நேரத்த்தில் பெற்றோர் என்ற பதவிக்கான பதவி உயர்வை பெறுவார்கள். இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் அல்லவா! இது மட்டுமல்ல, இவர்களைப் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

மேலும் படிக்க | மண்ணுலகை விட்டு மனங்களில் தங்கிவிட்டார் 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்!!

ஓஹியோவின் ட்வின்ஸ்பர்க்கில் நடைபெற்ற 2018 இரட்டையர் தின விழாவில், இந்த இரு தம்பதிகளும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் நடந்த  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகிழ்ச்சி செய்தி வருகிறது. அவர்களது திருமணமானது  இரட்டையர் திருமணம் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு, இது அவர்களுக்கு பெரும் புகழை பெற உதவியது.

தங்களுக்கு ஒரே நேரத்தில்,  குழந்தை பிறக்க போகிறது என்ற இந்த செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், வியப்பில் இருக்கிறோம்! எனக் அந்த இரு இரட்டை தப்பதிகளும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | பிரபல பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ...!!

https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-balasubrahmanyams-condition-improves-remains-on-ventilator-support-341060

அது மட்டுமல்ல, எங்கள் இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை என கூறியுள்ளனர்.

அதுவும் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் தான் வேண்டுமாம்…

இவர்களது ஆசைப்படியே இரட்டை குழந்தைகள் பிறப்பார்களா, அதுவு ஒரே நாளில் பிறப்பார்களா என்பதை அறிந்து கொள்ள நாம் இன்னும் சில காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Trending News