Viral image: மொபைல் மூலம் McDonaldஇல் உணவு வாங்கும் 4 வயது சிறுவன்

மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு  (67 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்ய நான்கு வயது சிறுவன் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறார். உணவை வாங்க அம்மாவின் மொபைலை சிறுவன் பயன்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 26, 2020, 08:48 PM IST
  • மொபைல் மூலம் McDonaldஇல் உணவு வாங்கும் 4 வயது சிறுவன்
  • 5000 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்து ஆச்சரியம்
Viral image: மொபைல் மூலம் McDonaldஇல் உணவு வாங்கும் 4 வயது சிறுவன் title=

மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு  (67 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்ய நான்கு வயது சிறுவன் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறார். உணவை வாங்க அம்மாவின் மொபைலை சிறுவன் பயன்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

தொழில்நுட்பம் பல ஆச்சரியங்களை சாத்தியமாக்கியுள்ளது. குழந்தைகள் சுலபமாக உணவை ஹோட்டல்களில் இருந்து வாங்கவும் முடிகிறது.  ஸ்மார்ட்போனை எடுத்து, உங்களுக்கு பிடித்த உணவகத்திலிருந்து செயலி (app) வழியாக ஆர்டர் செய்யுங்கள். கட்டணம் உட்பட எல்லாவற்றையும் app கவனித்துக்கொள்கிறது.  தொழில்நுட்பங்கள் நம்  அனைவருக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கிறது.  பணம் இருந்தால் போதும், தேவையான பொருட்களை வீட்டில் உட்கார்ந்தபடியே வரவழைத்து விடலாம். ஆனால் தப்பித்தவறி தவறாக பணம் செலவளிந்துவிட்டால் என்ன செய்வது?  

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனின் தாய்க்கு இப்படியொரு அனுபவம் கிடைத்தது. அவரது 4 வயது மகன் அம்மாவின் மொபைலை எடுத்து மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்தார். இது சாதாரண விஷயமாகத் தெரிகிறதா? முழுக் கதையையும் கேளுங்கள்.

மொத்தமாக பில் தொகை 400 Brazilian Real (INR 5000 அல்லது 67 USD). போர்த்துகீசில் நிகழ்ந்த இந்த வேடிக்கையான சம்பவத்தை அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மகன் ஒரு மேஜையில் உட்கார்ந்திருப்பதைக் காட்டுகிறது. 

சிறுவன் என்ன ஆர்டர் செய்தார்?

6 ஹாம்பர்கர், 6 மெக் ஹேப்பி ஸ்நாக்ஸ் (Mc Happy snacks), 8 extra toys, 2 பெரிய chicken nuggets மற்றும் 12 nuggets ,  பெரிய உருளைக்கிழங்கு சிப்ஸ், பன்றி இறைச்சி மற்றும் cheddar, 10 மில்க் ஷேக்குகள், 2 டாப் sundae strawberry, 2 apple tartlet, 2 McFlurry, 8 தண்ணீர் பாட்டில்கள், 1 திராட்சை சாறு பாட்டில் மற்றும் 2 எக்ச்ட்ரா சாஸ்கள்

இன்ஸ்ட்ராகிராமில் இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இதற்கு 100,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் 

தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News