பள்ளியில் பெண்கள் ‘நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம், ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சிலர் இந்த சிறு சிறு கொண்டாட்டங்களை நினைவில் கொள்ள அன்பளிப்புகள், மலர்கொத்து போன்றவற்றை பரிசளித்து மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றார்கள். இந்நிலையில், பள்ளியில் பெண்கள் ‘நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம், ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி மாணவர்கள் 2020 காதலர் தினத்தில் ஒரு அபத்தமான உறுதிமொழியை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது. சுமார், 0.45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மாணவிகள் 'நாங்கள் காதலிக்க மாட்டோம் யாரும் மற்றும் ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்' என கூறியுள்ளனர். அந்த வீடியோவை மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். மேலும் வீடியோவில், பல சிறுமிகள் வரிசையாக நின்று ஒரு நபருக்குப் பிறகு சத்தியம் செய்வதைக் காணலாம், அவர் பள்ளியின் அதிகாரியாகத் தெரிகிறது.
students from a girls college forced to take an absurd pledge in Amravati on Valentine's Day. The students are forced to pledge saying we will not love anyone and will never have a love marriage @Pankajamunde @news24tvchannel @VarshaEGaikwad @ChitraKWagh @meudaysamant pic.twitter.com/by8mV1wPgM
— Vinod Jagdale (@vinodjagdale80) February 14, 2020
இந்த சம்பவம் பிப்ரவரி 14 ஆம் தேதி அமராவதி சிந்தூரில் உள்ள பள்ளியில் நடந்தது. இந்த வீடியோவை ட்விட்டரில் @vinodjagdale80 என்ற நபர் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், மகாராஷ்டிரா துணைத் தலைவர் சித்ரா வாக், பாஜக தலைவர் பங்கஜா முண்டே, கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் ரத்னகிரி -சங்கேஷ்வர் தொகுதியின் எம்எல்ஏ உதய் சமந்த் ஆகியோரைக் TAG செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பங்கஜா முண்டே, காதலிக்காததற்காக சிறுமிகளை உறுதிமொழி கேட்பது மிகவும் அபத்தமானது என்று கூறினார். "கேலிக்குரியது !! வெறுமனே வித்தியாசமானது !! அமராவதியின் சிந்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த பெண்கள் காதலிக்கவில்லை, காதல் திருமணத்திற்கு செல்லமாட்டார்கள் என்று சத்தியம் செய்தார்கள் .. ஏன் பெண்கள் மட்டுமே சத்தியம் செய்கிறார்கள் ??" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.