இந்தியாவின் அழகான டாப் 5 கடற்கரைகள்..மெரினாவிற்கு எந்த இடம் தெரியுமா?

அலைகள் அடிக்கும் அழகான கடல்கள் ஆயிரம்..அதில் சில கடற்கரைகளை மட்டும் இங்கே பார்க்கலாம். 

Written by - Yuvashree | Last Updated : May 6, 2023, 07:07 PM IST
  • இந்தியாவின் அழகான 5 கடற்கரைகள்.
  • மெரினா 3 ஆவது இடத்தில் இருக்கிறது.
  • கோவா அழகான கடற்கரைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் அழகான டாப் 5 கடற்கரைகள்..மெரினாவிற்கு எந்த இடம் தெரியுமா?  title=

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரை என்றால் அலாதி பிரியம். “கரை வந்த பிறகே பிடிக்குது கடலை..” என கடலுக்கு பேச்சுக்காக எழுதவில்லை கவிஞர்கள். மனம் பாரமாக இருக்கும்போது அசைந்து அசைந்து ஆடி வரும் அந்த கடல் அலைகளை பார்க்கையில் காற்றுடன் சேர்ந்து நம் கவலையும் கரைந்து விடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இந்தியா முழுவதும் பல அழகான கடற்கரைகள் உள்ளன. அவற்றில் ஒரு 5-ஐ மட்டும் இங்கு பார்க்கலாமா? 

கோவாவின் பெனிலியம் கடற்கரை:

நம் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது, கோவாவில் உள்ள பெனிலியம் கடற்கரை. இந்த கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர்தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவாவை சிலர் பார்டி டவுன் என்றும் அழைப்பர். இந்த கடற்கரையிலும் புதுவருடம், கிரிஸ்துமஸ் ஆகிய தினங்களில் பார்ட்டி நடக்கும் என கூறப்படுகிறது. இதற்கு அருகில் நிறைய தங்கும் விடுதிகளும் உள்ளது. இது கோவாவில் உள்ள கடற்கரைகளிலேயே மிகவும் சுத்தமானது என கூறப்படுகிறது. 

திகா கடற்கரை-மேற்கு வங்காளம்:

கொல்கத்தாவில் அமைந்துள்ள திகா கடற்கரை, சுற்றுலா பயணிகளை அன்பு அலைகளுடன் ஆரவாரமாக வரவேற்கும் தன்மை உடையது. இக்கடற்கரை, குப்பகளன்றி மிகவும் சுத்தமாக காணப்படும் என இங்கு சென்று வந்தோர் தெரிவிக்கின்றனர். அதுவும், மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கென்றே அவ்வளவு கூட்டம் குவியுமாம். 

மேலும் படிக்க | Travel Tips: “மறக்காதீங்க..வருத்தப்படுவீங்க..” சுற்றுலா செல்கையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை

மெரினா-சென்னை:

புதிதாக சென்னைக்கு வருவோரும் சரி, சென்னையிலேயே தங்கியிருப்போரும் சரி, போர் அடித்தால் உடனே கிளம்பிவிடும் இடம் மெரினாதான். அதிலும் குறிப்பாக ஜோடிகளுக்கு மிகவும் பிடித்த இடம் இதுதான். அதிக மக்கள் தொகை நிறைந்த சென்னை மாநகரில் உள்ள பலருக்கு மெரினாதான் நண்பர்களுடன் அமர்ந்து பொழுதை கழிக்கும் இடமாக உள்ளது. முன்னர் மிகவும் மாேசமான நிலையில் இருந்த இந்த கடற்கரை இப்போது சுத்தம் செய்யப்பட்டு நன்றாக மெருகேறியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நடப்பதற்கென்று இங்கு ஒரு வழித்தடமும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வர்கலா-கேரளா:

கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வர்கலா. இந்த இடம், இயற்கை சுவாசத்தால் நிறைந்துள்ளதாகவும், நோய் வாய்ப்பட்ட பலருக்கு இந்த இடத்தின் தூய காற்று நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தின் ஹைலைட், இங்கு அமையப்பெற்றுள்ள கடற்கரை. இந்த கடற்கரைக்கு அருகிலேயா, 2000 ஆண்டுகள் பழமையான ஜனார்தன சுவாமி கோயில் மற்றும் சிவகிரி மடம் ஆகியவை மிகவும் பிரபலம். கேரளாவிற்கு செல்லும் பாதிக்கூட்டம் வர்கலா கடற்கரையை பார்க்காமல் திரும்புவதில்லை. 

பாண்டிச்சேரி கடற்கரையில்:

புதுச்சேரியில், பல கடற்கரைகள் உள்ளன. இங்கு வருவோர், பெரும்பாலும் வெளிநாட்டினராகவோ அல்லது போட்டோ ஷூட் வந்தவர்களாகவோதான் இருப்பர். பல்வேறு சுற்றுலா தளங்கள் நிறைந்துள்ள பாண்டியில், பல கடற்கரைகளும் அமைந்துள்ளன. கோவாவைப் போலவே பாண்டிச்சேரியம் மினி பட்ஜட் பார்ட்டிக்கு பெயர் போனது. கொராேனா காலத்தின் போது மெரினா உள்ளிட்ட பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. ஆனால், இங்கு மட்டும் பலரும் தடையின்றி புத்தாண்டை கொண்டாடினர். இந்த கடற்கரையும் நம் அழகான கடற்கரை லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | South Indian Recipes: குழி பணியாரம் முதல் குழா புட்டு வரை..தென்னிந்தியாவின் ‘கமகம’ ஸ்நாக்ஸ் ரெசிப்பிக்கள்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News