வேலை செய்ய திறமையான பணியாளர்கள் இருந்தால் தான் எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அது நன்றாக நடக்கும் என்பதால், பணியாளர்கள் மிகவும் மதிப்புமிக்க சொத்து ஆவார்கள். ஊழியர்களை ஊக்கிவித்து ஒரு நேர்மறையான பணிச்சூழலை வளர்ப்பதற்கு அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரம் வழங்குவது அவசியம். ஆனால், அது அப்படியில்லாதபோது, சீற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஒரு நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் சமூக ஊடக பயனர்களின் விமர்சனங்களை அள்ளிச் செல்கிறது. தங்கள் சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களில் ஒருவரை பணிநீக்கம் செய்து, மற்ற ஊழியர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்னென்ற எண்ணமானது எந்த அளவுக்கு சரி? என்ற கேள்வி எழுகிறது.
இந்த வைரல் செய்தி, சமூக ஊடகமான Reddit தளத்தில் ஒரு பயனரால் பகிரப்பட்டது, இது குறிப்பிடத்தக்க கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றது. Redditஇல் பதிவிட்ட பயனரின் கணக்கில், ஒரு நிறுவனத்தின் எதிர்பாராத நடத்தையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மேலும் படிக்க | LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்
தங்கள் விருப்பப்படி யாரையும் பணிநீக்கம் செய்யும் திறனை நிரூபிப்பதற்காக, நிறுவனம் தனது மிகவும் திறமையான ஊழியர்களில் ஒருவரை நீக்கியுள்ளது.
"எனது தற்போதைய வேலையில்,எங்கள் அலுவலக நிர்வாகம் தொழிலாளர்களின் கமிஷனை கொடுப்பதில்லை, ஒப்பந்த விதிமுறைகளை மதிப்பதில்லை, குளியலறையில் 5 நிமிடங்களுக்கு மேல் செலவழித்தால் எங்களுக்கு சிரமம் கொடுப்பது, கதவு ஏன் திறந்திருக்கிறது என்று சொல்வது உட்பட பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது" என்று ரெடிட்டர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
"நான் உற்சாகம் இல்லாமல் இருந்ததால், என்னை பதவி நீக்கம் செய்வதாக நிர்வாகத்தினர் மிரட்டினார்கள், நான் ஊக்கமில்லாமல் இருந்ததற்குக் காரணம், எனது கமிஷன்களை கொடுக்கவில்லை என்பதுதான். இன்று நன்றாக வேலை செய்யும் சக பணியாளரை பணிநீக்கம் செய்தனர்" என்று அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டதாக பயனர் மேலும் கூறினார். "ஆனால், கமிஷன்கள் அல்லது ஒப்பந்தங்களை மீறுவது போன்ற விஷயங்களுக்காக நிர்வாகத்துடன் சண்டையிடக்கூடாது என்பதால் பணிநீக்கம் செய்யப்படுகிறார் என்று, எங்கள் நேரடி மேலாளர் எங்களிடம் தெரிவித்தார். ஏனென்றால் அவர்கள் சொல்வதற்கு எதிராக நாங்கள் எதாவது சொல்ல முயற்சித்தால் அவர்கள் விருப்பப்படி யாரையும் பணிநீக்கம் செய்யலாம் என்பதை நிரூபிப்பதற்காக இப்படி செய்தார்களாம்!"
இந்தப் பதிவைப் பார்த்த பலரும், நிறுவனத்தின் நடவடிக்கைகளை 'நியாயமற்றது' என்று கருதினர், மற்றவர்கள் அதன் ஒட்டுமொத்த நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து கவலைகளை எழுப்பினர்.
"அவர்கள் ஒருவரின் கமிஷன்களை திருடுவதற்காக சிறந்த பணியாளரை பணிநீக்கம் செய்தார்கள். பின்னர் அவர்கள் அதை பயன்படுத்தி மற்றவர்களை பயமுறுத்த முயன்றனர்," என்று ஒரு ரெடிட் பயனர் கருத்து தெரிவித்தார்.
"இது ஒரு சிவில் வழக்கு போல் தெரிகிறது. இது மிகவும் மோசமான சம்பவம்,. கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்காது," மற்றொருவர் கூறினார்.
உலகளவிலான பொருளாதார மந்தம் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய வீழ்ச்சி என பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட தங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருகின்றன. ட்விட்டர், மெட்டா, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிஎன பல டெக் நிறுவனங்கள்அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன.
இதனையடுத்து, வேலைவாய்ப்புத்துறை சற்று மந்தமானது. ஃபேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா, கடந்த வாரம் 10,000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்ததோடு, 5,000 காலிப்பணியிடங்களை நிரப்பும் ஏற்பாடுகளை திரும்பப்பெற்றது. கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை ஜனவரியில் பணி நீக்கம் செய்தது. இந்த வரிசையில் மீண்டும் அமேசான் நிறுவனம் தற்போது இடம் பிடித்திருக்கிறது.
இப்படி, பொருளாதார மந்தநிலை உட்பட பல்வேறு காரணிகளால், இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் ஒருபுறம் இருக்கும் நிலையில், தங்கள் அதிகாரத்தை காட்டும் நிர்வாகத்தினரின் அலம்பல்கள் நெட்டிசன்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | PhonePe அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான காப்பீட்டுத் திட்டம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ