இந்த இயர்பட்ஸ் உங்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உதவும்!

ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு இந்த ஸ்பெஷல் இயர்பட்ஸ் உதவும்..!

Last Updated : Aug 25, 2020, 06:24 AM IST
இந்த இயர்பட்ஸ் உங்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உதவும்!  title=

ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு இந்த ஸ்பெஷல் இயர்பட்ஸ் உதவும்..!

வயதுக்கு ஏற்ப, ஒரு மொழியில் தேர்ச்சிப் பெறுவது என்பது மக்களுக்கு மேலும் மேலும் சவாலான ஒன்றாக மாறிவருகிறது. சிலர் இயல்பாகவே மொழிகளைக் கற்றுகொள்வதில் திறமையானவர்களாக இருக்கும்போது, பல சில கூடுதல் தொழில்நுட்ப உதவிகளைப் பயன்படுத்தி புதிய மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.

ஸ்பெஷல் இயர்பட்ஸ்... 

அப்படியென்ன தொழில்நுட்பம் மொழியைக் கற்க உதவும் என்று நீங்கள் யோசித்தால், நாங்கள் சொல்லப்போகும் பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை.

ஆமாங்க, புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உதவுவது ஒரு ஜோடி இயர்பட்ஸ். இது எப்படி சாத்தியம் என்று பார்க்கலாம் வாங்க.

இது போன்ற சாதனங்களின் முன்மாதிரிகள் பல ஆண்டுகளாக மற்றும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இப்போது வருகின்றன.

இதை அணிந்தவரின் மூளையில் ஒரு நரம்புப் பகுதியை மின்சாரம் மூலம் தூண்டுவதன் மூலம் இவை செயல்படுகின்றன.

மேத்யு லியோனார்ட் – மொழிக் காதலர் 

சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானி மேத்யு லியோனார்ட் அவர்கள், “நான் எப்போதும் மொழிகளைக் கற்பதை நேசிக்கிறேன்” என்று டிஜிட்டல் ட்ரென்ட்ஸ்-யிடம் தெரிவித்தார்.

ALSO READ | இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலம் கட்டுமானப்பணி 2022-க்குள் நிறைவடையும்!!

“ஆனால் பெரும்பாலான மக்களைப் போலவே, எனக்கும் இது மிகப்பெரிய சவாலானதாக நான் கருதுகிறேன். கடந்த 15 ஆண்டுகளில், ஒரு நரம்பியல் விஞ்ஞானியாக எனது முக்கிய பணி, மூளை எவ்வாறு பேச்சு மற்றும் மொழியை செயலாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதுதான், இருமொழிகள் உட்பட, எப்படியாவது ஒரு மூளையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளையும் வைத்திருக்க முடிகிறது.” என்று  அவர் கூறினார்.

ஆய்வின் நோக்கம்

அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு அறிவியல் மற்றும் கோளாறுகள் துறையில் பேராசிரியரான பரத் சந்திரசேகரனின் ஆய்வகத்தில் அவர்கள் ஒரு பரிசோதனையை மேற்கொண்டனர்.

இந்த அணுகுமுறை கற்றவருக்கு எவ்வாறு உதவும் என்பதை கண்டறிவதே பரிசோதனையின் முக்கிய நோக்கம்.

இந்த ஆய்வில் 36 பங்கேற்பாளர்கள் இருந்தனர், அவர்கள் அனைவருக்கும் டிரான்ஸ்கட்டானியஸ் வேகஸ் நரம்பு தூண்டுதல் (Transcutaneous Vagus Nerve Stimulation (VNS) electrodes) மின்முனைகளைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட இயர்பட்ஸ் பொருத்தப்பட்டது.

VNS பொதுவாக ஒரு மருத்துவ நுட்பமாகும். இருப்பினும், வழக்கமான ஒன்றைப் போலன்றி, ஆராய்ச்சியாளரால் உருவாக்கப்பட்ட இந்த VNS, வேகஸ் நரம்பின் ஒரு பகுதியை மட்டுமே தூண்ட முடியும், இது ஒரு உள்வைப்பு செயல்முறை தேவையில்லாமல் காதில் எளிதில் வைக்கக்கூடியது.

பங்கேற்பாளர்களுக்கு மூளை அலைகளை பதிவு செய்வதற்காக தலையில் பொருத்தப்பட்ட மின்முனைகளும் பொருத்தப்பட்டன.

மொழி சோதனை... 

ஆராய்ச்சியாளர்கள் வாசித்த ஒலிகளை யூகிக்கும்படி அவர்களிடம் கேட்கப்பட்டது, அவை முக்கியமாக மாண்டரின் (Mandarin) மொழியாக இருந்தன, ஏனென்றால் அதுதான் மேற்கத்தியர்களுக்குக் கற்றுக்கொள்வது மிகவும் சவாலான மொழியாகும். பின்னர் அவர்கள் கேட்கும் ஒலிக்கு ஒதுக்கப்பட்ட பொத்தானை அழுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கும் அந்த மொழி புரிந்தது.

இப்போது, இந்த ​​தொழில்நுட்பம் மிகவும் அருமையாக இருப்பதாக  தெரிந்தாலும், அது நிச்சயமாக இன்னும் பொதுமக்களுக்கு தயாராக இல்லை. இருப்பினும், இது போன்ற சாதனங்கள் மிக விரைவில் வடிவம் பெற்று விற்பனைக்கு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு அற்புதமான வழியாகவும் மாறக்கூடும். மேலும் இது ஒருவரின் மொழி சவால்களைச் சமாளிக்கவும்,  நடைமுறையை மிகவும் எளிமையாக கையாளவும் உதவும்.

Trending News