ZEE5-ல் சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு! வெளியானது டிரைலர்!

ZEE5 இணையத்தில் வெளியாக உள்ள  பாலிவுட் பிரபலம் சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்றின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Last Updated : Jul 6, 2018, 09:36 AM IST
ZEE5-ல் சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு! வெளியானது டிரைலர்! title=

ZEE5 இணையத்தில் வெளியாக உள்ள  பாலிவுட் பிரபலம் சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்றின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சன்னிலியோன் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்று டீஸர் கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இது சன்னிலியோன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்று டிரைலர் ஒன்று வெளியாகி உள்ளது. சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு ZEE5-ல் ஜூலை 16-ம் தேதி முதல் ஒளிபரப்புவதாக நடிகை சன்னிலியோன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' ஜூலை 16, 2018 அன்று ZEE5 இல் ஒளிபரப்பப்படும். 

Trending News