தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?

Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.   

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2024, 06:27 AM IST
  • தயிர் பல நன்மைகளை கொண்டுள்ளது.
  • முகத்திற்கு பொலிவை ஏற்படுத்துகிறது.
  • சரும பிரச்சனைகளை சரி செய்கிறது.
தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்? title=

Curd Benefits for Skin: வெயில் காலத்தில் பலரும் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவதில்லை. உடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர் சாதம் போன்ற உணவுகளை விரும்புகின்றனர். இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. பலருக்கும் தயிர் மற்றும் அதனை சார்ந்த உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் உள்ளது. உணவில் மட்டும் இல்லாமல் தயிரை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். இது பல நன்மைகளை வழங்குகிறது. தயிரில் புரோபயாடிக்குகள் மற்றும் லாக்டிக் அமிலம் காணப்படுகின்றன, இது சருமத்தை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும்  மாற்றுகிறது.

மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?

தயிரை சருமத்திற்கு தினசரி பயன்படுத்தினால் அரிப்பு, வறட்சி போன்ற சரும பிரச்சனைகள் நீங்கும். எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ தயிரில் அதே அளவு தீமைகளும் இருக்கிறது. எனவே, அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. தயிரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் நன்மைபயக்கும் அதே வேளையில் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் சருமத்திற்கு தீமைகளை ஏற்படுத்தும். சிலருக்கு லேசான சருமம் இருக்கும். அவர்கள் தயிரை பயன்படுத்தும் முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். அதிக உணர்திறன் கொண்ட சருமம் கொண்டவர்களுக்கு அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. 

தயிர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

சருமம் வறண்டு, நீரேற்றம் இல்லாமல் இருந்தால் தயிர் பயன்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மற்ற காலத்தை விட கோடையில் இதனை பயன்படுத்துவது சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி, குளிர்ச்சியடையச் செய்கிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை சேதமடையாமல் பாதுகாக்கிறது. இது அரிப்பு, வறட்சி போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

வெளியில் செல்லும் போது சன் சுகிறீன் போட்டு இருந்தாலும் வெயில், தூசி மற்றும் மாசு காரணமாக தோலில் அழுக்கு படிகிறது. இதனால் புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கூட தோல் உயிரற்றதாக இருக்கும். இது போன்ற சமயத்தில் தயிர் ஃபேஸ் பேக் பயன்படுத்துவது நல்லது. இது முகத்தில் இயற்கையான பொலிவை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள இறந்த செல்கள் அழிக்கப்படும் மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் குறையும்.

பாதிப்புகள்

மேலே குறிப்பிட்டது போல தயிரில் பல நன்மைகள் உள்ளன, இது சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். அதே சமயம் தினசரி தயிர் பயன்படுத்தினால் சில பாதிப்புகளும் வரலாம். தயிர் பல நன்மைகளை கொண்டு இருந்தாலும் சிலருக்கு பருக்கள் வர காரணமாக அமையலாம். எனவே, இந்த பிரச்சனை இருந்தால் கோடைக்காலத்தில் தினமும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் தவிர்த்திருங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News