30 ஆண்டுகளுக்கு பின் ராசி மாறும் சனி பகவான்; இந்த ராசிகளுக்கு கவனம் தேவை

ஜோதிடத்தில், சனி ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி தேவனின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்கள் வரும் என்று நம்பப்படுகிறது. 

Last Updated : Apr 7, 2022, 03:15 PM IST
  • வேலையில் மாற்றம் ஏற்படலாம்
  • எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்
  • மீன ராசிக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்
30 ஆண்டுகளுக்கு பின் ராசி மாறும் சனி பகவான்;  இந்த ராசிகளுக்கு கவனம் தேவை title=

ஜோதிடத்தில், சனி ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி தேவனின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்கள் வரும் என்று நம்பப்படுகிறது. 

சனி பகவான் ராசியை மாற்றும் போதெல்லாம், அது ஒரு நபரின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. சனி தேவன் 29 ஏப்ரல் 2022 அன்று ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றத்தின் போது சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். சனி தேவன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனி மாற்றம் சிறப்பாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: இந்த சனி பெயர்ச்சியினால் வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். மேலும், கடினமாக உழைத்து வேலை தேடுபவர்கள், கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள், ஏனென்றால் கடினமாக உழைப்பவர்களை சனி தேவன் என்றென்றும் கைவிடுவதில்லை. இருப்பினும், காதல் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு 

கடகம்: சனியின் ராசி மாற்றத்தினால் கடக ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன், ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். இது தவிர, பெயர்ச்சி காலத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனவே, சிறப்பு கவனம் தேவை.

மீனம்: சனியின் ராசி மாற்றத்தால் மீனத்தில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். சனியின் இந்த சஞ்சாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடனால் சிரமப்படுவீர்கள். எந்தவொரு துறையிலும் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மன உளைச்சல் இருக்கலாம். மேலும், குழந்தையைப் பற்றிய கவலையும் இருக்கும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பண விஷயத்தில் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்: சனி, செவ்வாயின் அருளால் செல்வம் கொழிக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News