ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வழங்கும் இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கு வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த அற்புதமான வசதியை எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் பெறலாம். உங்கள் மொபைல் தொலைபேசியில் YONO App செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அல்லது https://www.sbiyono.sbi என்ற எஸ்பிஐ யோனோ போர்ட்டலைப் பயன்படுத்தலாம். ஆதார் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்துக் கொண்டே வங்கிக் கணக்கைத் திறக்கலாம்.
இந்த வங்கிக் கணக்கை வீட்டில் இருந்தே திறந்தாலும், அதன் முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்:
- சாதாரண சேமிப்பு வங்கி கணக்கிற்கு வரையறுக்கப்பட்டபடி, வாடிக்கையாளர் குறைந்தபட்ச பண இருப்பை பராமரிக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கில் அதிகபட்ச இருப்பு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே...
- சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு அனுமதிக்கப்பட்ட ஓராண்டுக்கான மொத்த கடன் தொகை 2 லட்சம் மட்டுமே...
- தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கான இன்ஸ்டா சேமிப்பு கணக்கு கைபேசி / இயக்க முறைமை சார்ந்தது. இந்த சேவை தற்போது iOS 8 மற்றும் அதற்கு
- மேற்பட்ட ஐபோனில் கிடைக்கிறது, Android பதிப்பு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட Android தொலைபேசிகளில் இந்த சேவை கிடைக்கிறது...
- மொபைல் போன் மென்பொருளின் அனைத்து பதிப்புகளையும் ஆதரிக்க்கும் பொறுப்பு SBIக்கு கிடையாது என்று வங்கியின் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது...
Read Also | ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிதான சில படிகளில் செய்து முடிக்கலாம்
- இன்ஸ்டா சேமிப்பு கணக்கைத் திறப்பதற்கான கிளையை விண்ணப்பதாரரே தேர்ந்தெடுக்கலாம்....
- YONO Appஇல் Nomination கட்டாயமாகும். ஒருவரை மட்டுமே நியமனம் செய்ய முடியும்.
- அடிப்படை Rupay டெபிட் கார்டு வழங்கப்படும்.
- Green PIN process மூலம் ஏடிஎம் பின் உருவாக்கப்படும்.
- இந்த சேமிப்புக் கணக்கிற்கு பாஸ் புக் கிடையாது. வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மூலம் audio-visual statement அனுப்பப்படும்.
- இந்த கணக்கிற்கு காசோலை (Cheque book) வசதி கிடையாது.