அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ள SBI... இந்த முறை மிஸ் பண்ணாதீங்க!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக மேலும், ஒன்றரை மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை ஆகஸ்ட் 15, 2023 வரை நீட்டித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2023, 05:00 PM IST
  • SBI வங்கியின் 400 நாள் ‘அம்ரித் கலாஷ்’ சிறப்பு FD திட்டம்.
  • அம்ரித கலசம் திட்டத்தில் ஆகஸ்ட் 15 வரை முதலீடு செய்யலாம்.
  • மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.
அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ள SBI... இந்த முறை மிஸ் பண்ணாதீங்க! title=

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ளது.  முன்னதாக, இந்தத் திட்டத்தை ஏப்ரல் 2023 மீண்டும்  தொடங்கிய பிறகு, இதில் முதலீடு செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. SBI இன் இந்தத் திட்டத்தை உங்களால் இன்னும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆகஸ்ட் 15 வரை இப்போது முதல்லீடு செய்யலாம். அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் முதலீட்டு காலம் 400 நாட்கள்.  

SBI வங்கியின் சிறப்பு FD திட்டம்

வங்கியின் 400 நாள் ‘அம்ரித் கலாஷ்’ சிறப்பு FD திட்டத்தின் கீழ் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும் வழங்கப்படுகிறது. எஸ்பிஐயின் இந்த சிறப்பு FD திட்டத்தில் முன்கூட்டியே திரும்பப் பெறுதல் மற்றும் டெபாசிட் விருப்பங்களுக்கு எதிரான கடன் ஆகியவை அடங்கும். இந்த அம்ரித் கலஷ் ஸ்பெஷல் எஃப்டியில் நீங்கள் கடன் வாங்கலாம்.

மேலும் படிக்க | Hurun India 500: பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ்! பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி

முதலீடு செய்யும் முறை

எஸ்பிஐயின் அம்ரித கலசம் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், ஆகஸ்ட் 15 வரை முதலீடு செய்யலாம். இதன் பிறகு, புதிய வாடிக்கையாளர்கள் இதில் முதலீடு செய்ய முடியாது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் SBI கிளை, இணைய வங்கி அல்லது SBI YONO ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான 400 நாட்களுக்கான திட்டக்காலம் கொண்ட இந்த திட்டத்தில்  உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். 

மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

எஸ்பிஐயின் அம்ரித கலசம் திட்டத்தில் முதிர்வு முடிந்த பின்னரே உங்களுக்கு வட்டி வழங்கப்படும். மறுபுறம், நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே திரும்பப் பெற விரும்பினால், டெபாசிட் நேரத்தில் பொருந்தக்கூடிய விகிதத்தை விட 0.50% முதல் 1% வரை குறைவான வட்டியைப் பெறலாம். அதாவது, உங்களுக்கு 1 சதவீதம் குறைவான வட்டி கிடைக்கும். வருமான வரி விதிகளின்படி டிடிஎஸ் கழிக்கப்படும். இந்தச் சூழ்நிலையில், வரி விலக்கிலிருந்து விலக்கு கோர வாடிக்கையாளர் ITR ஐ தாக்கல் செய்யும் போது படிவம் 15G/15H ஐ நிரப்ப வேண்டும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  வட்டி விகிதம்

பாரத ஸ்டேட் வங்கி பொது மக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 3% முதல் 7% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.50% முதல் 7.50% வரை இருக்கும். 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் பொது குடிமக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% ஆகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கணக்கு தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்காக பெரும் வரவேற்பை பெற்ற அம்ரித கலசம் நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஆகஸ்ட் 15 முதல் வரை நீட்டித்துள்ளது.

மேலும் படிக்க | புகழின் உச்சத்திற்கு செல்லும் முகேஷ் அம்பானி! புதிய வரலாற்றை உருவாக்கிய ரிலையன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News