விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதிலும் விநாயாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாள் அவரை வழிபட மிகவும் உகந்த நாள். பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி, செப்டம்பர் 13ம் தேதி வருகிறது. சங்கடம் என்றால் துன்பம், பிரச்சனை, சிக்கல் ஆகியவை , ஹர என்றால் அழித்தல். ஆகவே, சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் வளம் பெருகி, பிரச்சனைகள் விலகி, எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது உறுதி.
விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க, பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதியானது உகந்த நாள். கேட்ட வரத்தை அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி மிக எளிமையான ஒரு விரதமாகும்.சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து கணபதியை பூஜித்து வர, குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை பாக்கியம் பெறலாம் என நம்பிக்கை நிலவுகிறது.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
கல்வி, அறிவுத் திறன், புத்தி கூர்மை, வெற்றி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றி அள்ளிக் கொடுக்கும், இந்த விரதத்தை கடைபிடிக்க, சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் ஸ்னாநம் செய்து, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் மாலை சாற்றுவதும் விநாயகருக்கு அர்ச்சனை செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
விரத முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள், பால், பாழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டிலேயே சக்திக்கு ஏற்றவாறு கொழுக்கட்டை, சுண்டல் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ