சிறு வயதிலேயே இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியாம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய ராசியானது பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது. வாழ்க்கையின் திசையை தீர்மானிப்பதில் ராசி மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 03:31 PM IST
  • அதிர்ஷ்டம் முழு ஆதரவைப் பெறுகிறது
  • பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்க வேண்டும்
  • செல்வத்திற்கு பஞ்சமில்லை
சிறு வயதிலேயே இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியாம் title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய ராசியானது பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது. வாழ்க்கையின் திசையை தீர்மானிப்பதில் ராசி மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தாலும் திருப்திகரமான பணம் சம்பாதிக்க முடியாது. அதேசமயம் சிலர் பணத்தை எளிதாக பெறுகின்றனர். அதன்படி சிறு வயதிலேயே இந்த 5 ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியாம். இவர்களின் விவரத்தை விரிவாக காண்போம். 

மேஷம்
இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதனால் மேஷ (Aries) ராசிக்காரர்கள் பணப் பட்டுவாடா செய்வதில் கில்லாடிக்காரர்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு அமோகமாவே உள்ளது. 

ALSO READ | Luky Zodiacs: அடுத்த 30 நாட்களுக்கு பொன்னான வாய்ப்பு பெறும் 5 ராசிக்காரர்கள்!

ரிஷபம்
ரிஷபம் (Tauras) ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் செல்வாக்கு அதிகம். செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறது. சுக்கிரனின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகள் மிக எளிதாக கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்கு சந்திரன் அதிபதி. இந்த ராசிக்காரர்கள் சந்திரனின் தாக்கத்தால் மட்டுமே கடின உழைப்பாளிகள். இது தவிர, இந்த ராசிக்காரர்களிடம் தலைமைத் திறனும் அபாரமாக இருக்கும். கடின உழைப்பால், கடக ராசிக்காரர்கள் இளமையிலேயே செல்வச் செழிப்பு மிக்கவர்களாக மாறுவார்கள்.

சிம்மம்
இந்த ராசியை ஆளும் கிரகம் சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாக அறியப்படுகிறார்கள். ஜாதகத்தில் சூரிய கிரகம் ஆதிக்கம் செலுத்துவதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஒளிர்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பரப் பொருட்களை விரும்புவர், இந்த ஆசையை நிறைவேற்ற, பணம் சம்பாதிக்க கடினமாக உழைப்பார்கள்.

தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு தேவகுரு பிருஹஸ்பதியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. அதுமட்டுமின்றி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு எபோதுமே உண்டு.

ALSO READ | சுக்ரனின் இடமாற்றத்தால், சில ராசிகளுக்கு கொண்டாட்டம், சிலருக்கு திண்டாட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News