Remedies for jadaga Dosham: ஜாதகத்தில் நிறைகளும் குறைகளும் இருக்கலாம். ஆனால் குறிப்பாக இந்த 5 தோஷங்கள் நிறைய சேதத்தை ஏற்படுத்தும், எதிர்மறையான பலன்களை கொடுக்கும். இந்த தோஷங்களுக்கான பரிகாரங்கள் என்ன தெரியுமா?
ஒருவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இக்குறைகளை நீக்க ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
ஒரு நபரின் ஜாதகத்தில் அசுப கிரகம் ஒரு சுப கிரகத்துடன் இணைந்தால், தோஷம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜாதகரின் இந்த தோஷங்களைப் போக்க சில விசேஷ நடவடிக்கைகளை எடுக்கலாம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? அவற்றுக்கான பரிகாரங்கள் என்ன என்பதை என்பதை அறிந்து கொள்வோம்.
பித்ரு தோஷம்: ஒவ்வொரு வருடமும் பித்ரு பக்ஷத்தின் போது முன்னோர்களுக்கு சிராத்தம் செய்யாதவர்கள், சிரார்த்த சடங்குகளில் ஈடுபடாதவர்கள், முன்னோர்களை வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் (Pitru Dosh) ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் ஏற்படலாம். நிதி நிலைமை மோசமடைவதால், வீட்டில் பிரச்சனைகளும் அதிகரிக்கத் தொடங்கும்.
ALSO READ | இந்த ராசிக்காரர்கள் கோவத்தை வென்று கூலாக இருப்பார்கள்: இதில் நீங்களும் உண்டா?
பித்ரு தோஷத்தைப் போக்க பரிகாரங்கள்
பித்ரா தோஷத்தைப் போக்க காக்கைகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் உணவளிக்க வேண்டும் (Feed the birds). அமாவாசை நாளில் வெள்ளைப் பசுவிற்கு பசும்புல்லை உண்ணக் கொடுக்கவும். பித்ரு தோஷ நிவாரண பூஜையை ஒரு கற்றறிந்த ஜோதிடரிடம் முறையாக தெரிந்துக் கொண்டு, தோஷத்தைப் போக்கலாம். பொதுவாக காசி மற்றும் கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது.
செவ்வாய் தோஷம்: தம்பதியினரின் வெற்றிகரமான மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு, இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருப்பது அவசியம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு, உறவில் பாதகமான விளைவுகள் தோன்றத் தொடங்கும். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் முதல், நான்காம், ஏழாவது, எட்டாவது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் போது, செவ்வாய் தோஷம் ஏற்படும்.
செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம்
செவ்வாய் கிரகத்திற்கு விளக்கேற்றி வழிபடவும். செவ்வாய்கிழமையன்று கோயிலுக்குச் சென்று, துர்க்கையை வழிபட்டு தீபம் ஏற்றவும். ஹனுமான் சாலிசாவைப் படியுங்கள். செவ்வாய் தோஷ பரிகார பூஜையை முறைப்படி செய்யவும்.
ALSO READ:தீராத பிரச்சனையா... கை மேல் பலன் கொடுக்கும் ‘5’ புதன் கிழமை பரிகாரங்கள்..!!
கால சர்ப்ப தோஷம்: ஜாதகத்தில் ராகு மற்றும் கேது இணைந்து வருவதால் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. தங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என்று கேட்டாலே வருத்தப்படுபவர்களும் உண்டு. இந்த தோஷம் இருப்பவர்களின் வாழ்க்கை, போராட்டமாகவே இருக்கும். தகுதி இருந்தாலும் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்திக்க நேரிடுகிறது. இதற்கான பரிகாரங்களை செய்தால் கால சர்ப்ப தோஷத்தை நீக்கி நிம்மதியாக வாழலாம்.
கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி?
செவ்வாய்கிழமை பாம்புகளுக்கு பால் வார்க்கவும். துர்க்கை மற்றும் விநாயகப் பெருமானை வழிபடவும். செவ்வாய் கிழமைகளில் ராகு மற்றும் கேதுவிற்கு தீபம் ஏற்றி வழிபடவும். ஹனுமான் சாலிசாவைப் படியுங்கள்.
இந்த பொதுவான ஜாதக பரிகாரம் வாழ்வில் நிம்மதியைக் கொடுக்கும்.
தினமும் 21 முறை ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை ஜபிக்கவும். கோயிலுக்குக் சென்று தினமும் சிவனை வழிபடுங்கள். 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 11 முறை உச்சரிக்கவும்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை.)
ALSO READ: டிசம்பரில் வரும் சூரிய கிரகணம் இந்த 5 ராசிகளை பாடாய் படுத்தும்: ஜாக்கிரதை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR