புது தில்லி: இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நீங்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கச் செல்லும் போது, ஏடிஎம்-ல் பணம் வரவில்லை என்றால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறீர்கள். ஆனால் இனிமேல் அப்படி நடக்க வாய்ப்பிருக்காது. அதிக நேரத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களை பணம் இல்லாமல் வைத்திருக்கக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Zee News தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட பிரத்யேக தகவல்களின்படி, ஏடிஎம் இயந்திரங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பணமில்லாமல் இருந்தால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் ஏடிஎம் மசினில் பல நாட்கள் பணம் இல்லாமல் இருக்கிறது என்று அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் மக்கள் ஒரு சிறிய தொகையை எடுக்கக்கூட வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று எடுக்க வேண்டடிய நிலை உள்ளது.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஏடிஎம்-ல் பணம் கிடைக்காவிட்டால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப வித்தியாசமாக இருக்கும்.
உண்மையில், ஏடிஎம்களில் உள்ள சென்சார்கள் மூலம் வங்கிகள் நிகழ்நேர அடிப்படையில் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருக்கின்றன என்ற தகவல்களைப் பெறுகின்றன. அதன்மூலம் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் உள்ளது. அது முடிந்துபோக சராசரியாக எவ்வளவு நேரம் என்பதையும் வங்கிகளுக்கு தெரியும். அதன் அடிப்படியில் ஏடிஎம் இயந்திரங்களில் வங்கிகள் பணம் நிரப்ப வேண்டும். ஆனால் சில நேரங்களில் வங்கிகள் அதை புறக்கணிக்கிறது.