பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்: வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடனுதவி... முழு விபரம் இதோ...

PM Vidyalakshmi Yojana : மத்திய அரசு, ஏழை எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், கல்விக் கடன் உதவி வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2024, 04:42 PM IST
  • பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் பலனை பெற டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  • ஏழை மாணவர்களுக்கு கல்வித்துறையில் சம வாய்ப்பு.
  • மாணவர் சேர்க்கை பெறும் கல்லூரியின் NIRF தரவரிசை 1- 100 வரையில் இருக்க வேண்டும்.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்: வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடனுதவி... முழு விபரம் இதோ... title=

பிரதம மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனா: நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்,  தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், மத்திய அரசு பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வித்துறையில் சம வாய்ப்பு கிடைக்கும். 

நாட்டில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உயர்கல்வி பெற முடியாத மாணவர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு உதவுவதே பிரதம மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனாவின் நோக்கம். மத்திய அரசின்  இந்த திட்டத்தின் கீழ், சிறந்த கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெறலாம். இந்த திட்டம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

திட்டத்தின் கீழ் பலன் பெறும் மாணவர்கள்

ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானம் கொண்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் தொகைக்கு உத்தரவாதம் வழங்குவதால், 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் மாணவர்களுக்கு எளிதாக கடன்களை வழங்கும். 

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் பலனை பெற விண்ணப்பிக்கும் முறை 

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் பலனை பெற வெளிப்படைத்தன்மையுடன் முற்றிலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம்.  பிரதான் மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனாவிற்கு விண்ணப்பிக்க, முதலில் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.vidyalakshmi.co.in/Students/ ஐப் பார்வையிட வேண்டும். இணையதளத்தைப் பார்வையிட்ட பிறகு, தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க |PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025: ரூ.6000/மாதம் - பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு பிணையில்லாத கடன்

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ், 860 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு பிணையில்லாத கடன் வழங்கப்படும். மாணவர் சேர்க்கை பெறும் கல்லூரியின் NIRF தரவரிசை  1- 100 வரையில் இருக்க வேண்டும். இது தவிர, மாநில அளவில் கல்லூரியின் தரவரிசை 200 வரை என்ற அளவில் இருக்க வேண்டும். இது தவிர, கல்வி நிறுவனம் அரசுக்கு சொந்தமானதாக இருப்பதும் அவசியம். இந்தப் பட்டியல் சமீபத்திய NIRF தரவரிசைகளுடன் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  EPFO Rules: அவசர தேவைக்கு PF கணக்கில் இருந்து பணம் எடுக்க ... நீங்கள் செய்ய வேண்டியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News