ராம்சரண் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகும் “கேம் சேஞ்சர்”படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு !

இயக்குநர் சங்கர் கூட்டணியில் நடிகர் ராம் சரண்  நடிக்கவிருக்கும் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான "கேம் சேஞ்சர்" படத்தின் அதிரடி டிரெய்லர் வருகின்ற புத்தாண்டையொட்டி ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 

 

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் படத்தின் நிகழ்ச்சி இதுவே. இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பைத் தூண்டி வருகிறது.  ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட் ரசிகர்கள் விஜயவாடா பிருந்தாவன காலணியில் உள்ள வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் அமைத்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் இந்த கட் அவுட் அமைக்கப்பட்டது. 

 

1 /8

ஜனவரி 1யில் வெளியாகும் டிரெய்லரை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். மேலும் விஜயவாடா தெலுங்கு திரையுலகின் தாய்வீடான பவர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் மாபெரும் பவர் ஸ்டார் ரசிகர்கள் இணைந்து ராம் சரணுக்கு 256 அடி கட்-அவுட்டை அமைத்ததற்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியில் தில் ராஜு இவ்வாறு கூறினார். 

2 /8

துணை முதல்வர் பவன் கல்யாண்  இந்நிகழ்வில் கலந்து கொள்ள முன்வந்ததால் இ ந் நிகழ்வைப் பெரிய அளவில்  நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு அமெரிக்காவில்  இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் இது வரலாற்றுச் சாதனைப்படைத்தது என்று கூறினார். 

3 /8

இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் இருவேடங்களில் பிரம்மாண்ட தோற்றத்துடன் நடித்துள்ளார்.  

4 /8

இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி இணைந்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீ காந்த் மற்றும் பல பிரபல முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.  

5 /8

எஸ்.திருநாவுக்கரசு இப்படத்திற்கு மிகவும் பிரம்மாண்ட திரையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் சினித்துறையில் ஒளிப்பதிவாளர்களுள் பிரபலமானவர்.   

6 /8

சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் மாசாக இசையமைத்துள்ளார்.  

7 /8

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில்  தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள  கேம் சேஞ்சர் திரைப்படம்.  

8 /8

ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகளவில் வெளியிடப் படக்குழுத் திட்டமிடப்பட்டுள்ளனர்.