Pakistan Mother Second Marriage Viral Video: நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானில் இளைஞர் ஒருவரின் செயல் பலரின் இதயத்தையும், கவனத்தையும் கவர்ந்துள்ளது எனலாம். தாயாரின் ஆசையை நிறைவேற்றவும், தாயார் கேட்பவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் ஆகியவை பிள்ளைகள் இயல்பாக நினைக்கும் ஒன்றுதான். ஆனால் பாகிஸ்தானில் மகன் ஒருவர் தனது தாய் விருப்பப்பட்டார் என்பதற்காக அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைத்த செயல் பலரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
தாயாரின் இரண்டாம் திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை அப்துல் அகாத் என்ற அவரின் மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு வீடியோவில் அவர்,"கடந்த 19 ஆண்டுகளாக, என்னால் இயன்றவற்றை செய்து அவரது வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற கடுமையாக முயற்சித்து வருகிறேன். அவரும் எங்களுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்" என பேசியிருந்தார். மேலும், அவர் அதில்,"எனது தாயார் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர். எனவே ஒரு மகனாக, நான் சரியானதை செய்தேன் என்றுதான் நினைக்கிறேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பைப் பெற என் தாயாரை ஆதாரித்தேன்" என்றார்.
தாயாரின் இரண்டாம் திருமணம்
அந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் அப்துல் மற்றும் அவரது தாயார் இடையேயான அற்புதமான உறவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு இருவரும் அளவுக்கு அதிகமாக பரஸ்பரம் பாசத்தை பொழிவதை பார்க்க முடிகிறது. அப்துல் தாயாரின் இரண்டாம் திருமண நிகழ்ச்சியின் அந்த வீடியோ நிறைவு பெறும்போது நிச்சயம் உங்களுக்குள்ளேயே நீங்கள் அப்துலையும், அவரது தாயாரையும் அவர்களின் பாசாங்கற்ற பாசத்திற்காக நிச்சயம் பாராட்டுவீர்கள் எனலாம்.
தொடர்ந்து தனது தாயாரின் இரண்டாம் திருமணம் குறித்து அப்துல் பகிர்ந்துள்ள மற்றொரு பதிவில்,"எனது தாயாரின் திருமணம் குறித்து வெளியே சொல்ல பல நாள்களாக தயங்கினேன். ஆனால், இப்போது நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் என்னை உணர்ச்சி பெருக்கில் மூழ்கடிக்கிறது. எங்களது முடிவுக்கு எந்தளவிற்கு மதிப்பளித்து, அதனை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறீர்கள் என்பதை எனது தாயாரிடம் சொன்னேன். உங்களின் அனைத்து மெசேஜ்கள், கமெண்ட்டுகள், ஸ்டோரிகளுக்கு என்னால் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க இயலவில்லை. ஆனால், எங்களை வாழ்த்திய அனைவரும் எங்கள் உயிருக்கும் மேலானவர்கள்" என மனம் நெகிழ தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.
முற்போக்கான முன்னெடுப்பு
எப்போதும் 80 வயது முதியவர் 5ஆவது திருமணம் செய்துகொண்டார் போன்ற செய்திகளே அதிகம் வெளியாகும். இந்த நவீன காலகட்டத்திலும் சில சமூகங்களில் பெண்களுக்கு இரண்டாம் திருமணம் என்பதும் பெரும் கடினமான ஒன்றாக உள்ளது. பெண் கல்வி, ஆண்களுக்கு நிகரான ஊதியம் ஆகியவற்றை பெண்கள் இந்த காலத்தில் பெற்றுவிட்டாலும் கூட சில சமூக தடைகளும் பெண்களுக்கு இருக்கின்றன.
அப்படியிருக்க பாகிஸ்தான் போன்ற கட்டுபாடுகள் நிறைந்த நாட்டில் ஒரு மகன் தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைப்பதும், அதனை தயக்கம் இன்றி பொதுவெளியில் அறிவிப்பதும் முற்போக்கான நடவடிக்கை என இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த தாயார் தனது மகனை நல்ல விதமாக வளர்த்திருக்கிறார் என தாயாருக்கும் வாழ்த்துகள் குவிகிறது. அப்துல் பகிர்ந்த தாயாரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Fact Check: வதந்திகளை நம்பாதீர்கள்
பலரும் இணையத்தில், பாகிஸ்தானில் மகன் அவனது தாயாரை இரண்டாவது திருமணம் செய்ததாகவும், இது தரம் தாழ்ந்த செயலாகவும் கூறி அப்துல் மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகள் பரப்பி வருகின்றனர். மகன் அப்துல் அவனது தாயாருக்கு இரண்டாம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தானே தவிர, தனது தாயாரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ