New Ration card Update | தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாகும் இலவச அரிசி, மலிவு விலை மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டு கட்டாயம். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களின் பயனாளிகளாக இருக்க வேண்டும் என்றாலும் ரேஷன் கார்டு அவசியம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தால், அதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய ரேஷன் கார்டு கேட்டு மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஆப்லைனில் விண்ணப்பம் கொடுத்தவர்களில் ஒருசிலருக்கு உடனடியாக ரேஷன் கார்டு கிடைத்துவிடுகிறது. மற்றவர்களுக்கு பரிசீலனையில் இருப்பதாகவே அரசு ஊழியர்களிடம் இருந்து பதில் வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்கள் எல்லாம் இன்னும் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதற்கு முன்பே ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களும் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதிலும் ஆப்லைன் விண்ணப்பங்களைக் காட்டிலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில் மிகப்பெரிய சுணக்கம் இருக்கிறது.
அரசு ஊழியர்களிடம் விசாரித்தால் புதிய ரேஷன் கார்டு கொடுக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை, பரிசீலனையில் இருக்கிறது என்ற பதிலை மட்டுமே வழக்கமாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஆன்லைனில் விண்ணப்பித்தீர்களா? ஆப்லைனில் விண்ணப்பித்தீர்களா? என்ற கேள்வியை கேட்கும் ஊழியர்கள் ஆன்லைன் என்றால் புதிய ரேஷன் கார்டு கிடைக்க தாமதமாகும், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தபிறகு தான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறுகின்றனர்.
இதனால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் பலர் அரசு மீது அதிருப்தியில் இருப்பதுடன் கடும் மன உளைச்சலையும் எதிர்கொள்கின்றனர். ஏனென்றால், புதிதாக திருமணமான தம்பதிகள் எந்தவொரு திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் ரேஷன் கார்டு ஆவணம் தேவைப்படுகிறது. வருமானவரிச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் கூட ரேஷன் கார்டு தேவை. அப்படியான இந்த கார்டு இல்லாதபோது கூடுதலாக சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அலைச்சல், அழைக்கழிப்புகளையும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதனால், தமிழ்நாடு அரசு மற்றும் துறை அமைச்சர் ஆகியோர் ரேஷன் கார்டு விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. ஆன்லைன் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணாதீங்க மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ