Paytm offer: ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்களுக்கு ரூ.500 வரை தள்ளுபடி!

Paytm Diwali offer: தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்ப உள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2023, 06:24 AM IST
  • தமிழகத்தில் தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட்டது.
  • மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் விமர்சையாக கொண்டாடினர்.
  • நவம்பர் 13ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Paytm offer: ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்களுக்கு ரூ.500 வரை தள்ளுபடி!  title=

பண்டிகை நாட்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்க, அந்த சமயங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.  பண்டிகை காலம் வந்து விட்டாலே தனியார் பேருந்துகள் கட்டணங்களை அதிகப்படுத்தி விடுவார்கள். தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.  தீபாவளிக்காக மாநிலம் முழுவதும் நவம்பர் 9 முதல் 11 வரையிலும், நவம்பர் 13 முதல் 15 வரையிலும் 17,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை அரசு போக்குவரத்து துறை இயக்குகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அருமையான திட்டம்... மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்

நவம்பர் 9 முதல் 11 வரை 10,975 பேருந்துகள்

"சென்னையில் இருந்து 4,675 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 5,920 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் இருந்து சராசரியாக 2,100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அந்த மூன்று நாட்களில் மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும்” என்றார். மேலும் ஆம்னி பஸ் சங்கத்தினர் அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர், பஸ் கட்டணங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 5% குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி ஸ்லீப்பர் கட்டணம் ரூ.2,456 ஆகவும், மதுரைக்கு ரூ.2,143 ஆகவும், திருச்சிக்கு ரூ.1,518 ஆகவும், தஞ்சாவூருக்கு ரூ.1,563 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வால்வோ பஸ்களின் கட்டணம் அதிகமாக இருக்கும். என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Paytm ஆபர்

இணையத்தில் பணம் அனுப்புவது, டிக்கெட் புக் செய்வது என Paytm அனைத்து பயணத் தேவைகளுக்கும் ஒரே ஒரு தீர்வாக உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியை வழங்குகிறது. Paytm தளமானது ரயில்கள் அல்லது பேருந்துகளின் ஆன்லைன் முன்பதிவுகளில் குறைந்த விலையில் டிக்கெட்களை பெற உதவுகிறது.  சில நிமிடங்களில் எங்கு செல்ல வேண்டுமானாலும், பல சலுகைகளுடன் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். Paytm மூலம் பஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், டிக்கெட் புக் செய்பவர்களுக்கு பேருந்து எங்கு வந்துகொண்டு இருக்கிறது என்ற நேரடி பேருந்து கண்காணிப்பு சேவையை பெறலாம். எனவே, பேருந்தில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் தொடர்புகளுடன் நேரலை நிலையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

Paytm பயனர்கள் தங்கள் முன்பதிவுகளை எந்த ரத்து கட்டணமும் இல்லாமல் ரத்து செய்ய அனுமதிக்கிறது. சார்ட் தயாரிக்கப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே இது வசதி கிடைக்கும். மேலும், பயனருக்கு உடனடி முழுப் பணம் திரும்ப கிடைக்கும். புதிய அம்சம் அனைத்து வகையான ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கும் செல்லுபடியாகும், இதில் தட்கல் டிக்கெட்டுகளும் அடங்கும். Paytm பயனரை UPI மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது, மேலும் கூடுதல் செலவுகள் எதுவும் வசூலிக்கப்படாது. Paytm செயலி மூலம் ரயிலின் நேரடி நிலை மற்றும் PNR நிலையைப் பயனர் சரிபார்க்கலாம்.  Paytm இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளது. இருவரும் சேர்ந்து, Paytm மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு பல ஆபர்களை வழங்குகிறார்கள். இந்த தீபாவளிக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருவதற்கான டிக்கெட் புக் செய்ய பல ஆபர்களை வழங்குகிறது.  மேலும், பயனர்கள் பயணக் காப்பீடு, எளிதான மற்றும் விரைவான முன்பதிவு, கேஷ்பேக் மற்றும் 24/7 வாடிக்கையாளர் உதவி ஆகியவற்றை பெற முடியும்.

மேலும் படிக்க | NPS முக்கிய அப்டேட்: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News