Parenting Tips From Virat Kohli Anushka Sharma : இந்தியாவில் இரண்டு விஷயங்கள் மிகவும் பிரபலம். ஒன்று சினிமா, இன்னொன்ரு கிரிக்கெட். அது என்னவோ தெரியவில்லை பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளையே தங்களின் வாழ்க்கை துணைகளாக தேர்ந்தெடுத்து கொள்கின்றனர். அப்படி, கடவுளாக பார்த்து போட்டு வைத்த முடிச்சுதான் விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா. 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, வாமிகா மற்றும் அக்காய் என்ற பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
விராட் கோலி-அனுஷ்கா சர்மாவின் காதல்:
“அடடே..இந்த காலத்தில் இது போன்ற காதலை பார்ப்பது அரிதாக இருக்கிறதே..” என்று கூறும் அளவிற்கு காதலிப்பவர்கள், விராட் கோலி-அனுஷ்கா சர்மா. திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் சில ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்த இவர்கள், தற்போது திருமணத்திற்கு பிறகும் அதே காதலுடனும் பாசத்துடனும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு வாமிகா என்ற மகள் 2021ஆம் ஆண்டு பிறந்தார், அக்காய் என்ற மகன், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பிறந்தார். இவர்கள் தங்களின் குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும், பிற பெற்றோர் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
எப்போதும் சரியான பெற்றோராக இருக்க வேண்டுமா என்ன?
நம் சமுதாயத்தை பொருத்தவரை, பெற்றோர் என்றால் சில வரமுறைகளுக்கு கீழ் வரவேண்டும் என்று சில விஷயங்கள் இருக்கும். எனவே, பெற்றோர்கள் மீது எப்போதும் ஒரு அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். இது குறித்து ஒரு முறை பேசிய அனுஷ்கா சர்மா, பெற்றோர் என்றால் எப்போதும் perfect ஆக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், பெற்றோர்களும் தவறு செய்து திருத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும், அது போல நாம் இருந்தால்தான், குழந்தைகளும் அதை பார்த்து தன்னிடம் இருக்கும் நிறை, குறை என அனைத்தையும் கற்றுக்கொள்வர் என்றும் தெரிவித்தார்.
பெற்றோர்களின் இஷ்டப்படி..
பெற்றோர்கள், பிறருக்காக என்று இல்லாமல், தங்களுக்காக, தங்களின் விதிமுறைகளின் படி வாழ வேண்டும் என்கிறார் அனுஷ்கா. ஒரு தாயாக மட்டும் அல்லாமல், தனியொரு பெண்ணாகவே தான் எங்கு சென்றாலும் நேரத்தை சரியாக கடைப்பிடிப்பாராம். இது குறித்து அவரது கோ-ஸ்டார்கள் என அனைவருமே இது குறித்து பேசியிருக்கின்றனர். எனவே, நம் வாழ்க்கையை, நாம் விதித்த விதிமுறைகளின்படி வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் தாங்களும் ஜெயித்து, குழந்தைகளையும் ஜெயிக்க வைக்க முடியும் என்பதை நம்புகிறவர் அனுஷ்கா சர்மா.
மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..
மதிப்புகளை கற்றுக்கொடுத்தல்:
குழந்தைகளுக்கு வாழ்க்கையின் மதிப்பையும், வாழ்வில் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பையும் கற்றுக்கொடுக்க, இவர்கள் வாய் வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. மாறாக, தங்களின் செயல்பாடுகள் மூலமாக அவற்றை கற்றுக்கொடுக்கின்றனர். இது குறித்து ஒரு நேர்காணலில் பேசிய அனுஷ்கா சர்மா, தனது மகளுக்கு எதுவாக இருப்பினும் தன்னால் நேரடியாகவே கற்றுக்கொடுக்க முடியும் என்கிறார். அவர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை நாம் வாழ்ந்துதான் கற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர, வாயால் சொன்னால் புரியாது என்றும் கூறியிருக்கிறார்.
தனிப்பட்ட விஷயங்கள்:
அனுஷ்காவும் விராட் கோலியும், தங்களின் குழந்தைகள் வாமிகா மற்றும் அக்கய்யின் புகைப்படங்களை இன்று வரை எங்குமே வெளியிடவில்லை. இதற்கு அவர்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. இதனால் பலர் அவர்களை விமர்சித்தாலும், சிலர் அவர்களுக்கான காரணங்களை மதிக்கின்றனர். எனவே, தங்களுக்குறிய விஷயங்களை தனிப்பட்ட முறையில் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் கூறி வளர்க்கின்றனர்.
மேலும் படிக்க | சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ