Safety Precautions Before Staying In Hotel : பயணம் மேற்கொள்வது என்பது, பலருக்கு பிடித்த ஹாபியாக இருக்கலாம். அதிலும், இப்போது சோலோ ட்ராவலிங் என்பது புது ட்ரெண்டாக மாறி விட்டது. குறிப்பாக, பெண்கள் பலர் தனியாக டிராவல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படி வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு நாம் பயணம் செய்யும் போது ஹோட்டல் புக் செய்து அதில் தங்குவது என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விடுகிறது.
சில சமயங்களில், ஹோட்டல் அறைக்குள் கேமரா, கேட்கும் கருவிகள் கண்டெடுக்கப்படும் செய்திகளும் கண்களில் படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு நாம் பாதுகாப்பான ஹோட்டல் அறைகளில் தங்குவது என்பது மிகவும் அவசியமாகும். இனி, அறை எடுத்து தங்கும் முன்னர், ‘இந்த’ விஷயங்களில் உஷாராக இருந்து பழக வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
கதவு தாழ்ப்பாள்:
நாம், அறைக்குள் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் கருவிதான் தாழ்ப்பாள். ஆனால், அது சரியாக பொறுத்தப்பட்டிருக்கிறதா இல்லை, வேறு ஏதேனும் பிரச்சனை அதில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நமது கையில் இருக்கிறது. அது சரியாக இயங்குகிறதா என ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன்பு செக் பண்ண தவறாதீர்கள். அதில் ஏதேனும் பிரச்சனை தெரிந்தால் உடனே ஹோட்டல் ஊழியரிடம் கூறிவிட வேண்டும்.
கழிவறை சோதனை:
அறையில் முக்கியமான ஒரு அங்கமாக இருப்பது, கழிவறையாகும். அங்குதான் நாம் பாதுகாப்பு சோதனைகளை தீவிரமாக நடத்த வேண்டும். முதலில், அதன் தாழ்ப்பாளை சோதனையிட வேண்டும். பின்னர், ஷவரின் ஓட்டைகள், ஃப்ளஷ் டேங்க் அருகே, அலமாரியின் ஆணி இடுக்குகள் என அனைத்து இடங்களிலும் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். கழிவறைக்கு வேறு கதவு இருக்கிறதா? ஏதேனும் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?
கேமரா சோதனை:
நமது மொபைல் ஃபோனிலேயே கேமராக்கள் இருந்தால் அலர்ட் செய்யும் சில செயலிகள் இருக்கின்றன. அல்லது, கையோடு Hidden camera detector கருவியை எடுத்துக்கொண்டு செல்லலாம். இதை அறையில் இருக்கும் அனைத்து இடங்களுக்கு எடுத்து சென்றால், எங்கெங்கு கேமரா இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்து விடும்.
சிக்னல்:
நீங்கள் இருக்கும் அறையில், செல்போன் சிக்னல் கிடைக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். உங்கள் போனில் பார்ப்பதோடு, அறையில் இருக்கும் லேண்ட்லைனும் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதே போல, திடீரென தீ அல்லது நீங்கள் இருக்கும் கட்டடத்திற்கு ஆபத்து வந்தால் உடனடியாக தப்பிக்க வழி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
உங்கள் அறையை சுற்றி சந்தேகத்திற்குரிய நபர்கள் வலம் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்கள் நீங்கள் கிளம்பும் நேரம் உங்கள் ஹோட்டல் அறைக்கு வெளியில் நின்றாலும், உங்களை நோட்டமிடுவது போல தோன்றினாலும் உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். கூடவே, விலை மதிப்பு மிக்க பொருட்களை வைத்து விட்டு செல்கையில் அதை பாதுகாப்பாக வைக்கவும்.
மேலும் படிக்க | Two Wheeler ஓட்டுபவரா நீங்கள்: இந்த பாதுகாப்பு டிப்ஸ் உங்களுக்காகத்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ