Kulfi Recipes: வெயிலுக்கு ஜில்லுன்னு சுவையான மலாய் குல்ஃபி-குளுகுளு மாம்பழ குல்ஃபி..ரெசிபிகள் இதோ

வெயிலுக்கு இதமாக குளுகுளு குல்ஃபிக்களின் ரெசிப்பிகள்.

Written by - Yuvashree | Last Updated : May 8, 2023, 05:35 PM IST
  • வெயிலுக்கு இதமான இரண்டு குல்ஃபிக்களின் ரெசிப்பிகள்.
  • மலாய் குல்ஃபி பெரியவர்களையும் சிரியவர்களாக்கும்.
  • மாம்பழ குல்ஃபி நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.
Kulfi Recipes: வெயிலுக்கு ஜில்லுன்னு  சுவையான மலாய் குல்ஃபி-குளுகுளு மாம்பழ குல்ஃபி..ரெசிபிகள் இதோ title=

மாம்பழ சீசனும் தொடங்கிவிட்டது..கோடை வெயிலும் தொடங்கிவிட்டது. இந்த வெயிலுக்கு சுவையான மாம்பழத்தை வைத்து குல்ஃபி  செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இன்னும் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? உடனே ரெசிப்பிக்குள் குதித்துவிடலாம் வாருங்கள். 

மாம்பழ குல்ஃபி:

மாம்பழங்களை அப்படியே சாப்பிட்டாலே அப்புட்டு ருசி, இதை குல்ஃபியாக செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்? முகலாயர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குல்ஃபி வைகயானது, தொன்று தொட்டு இன்று வரை நம் நாக்கில் சுவை ஊற நடனமாடிக் கொண்டு இருக்கின்றது. சரி, இந்த குல்ஃபியை எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? 

மாம்பழ குல்ஃபி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • 2 கப் பால்
  • அரை கப் சுண்டக்காச்சிய பால் (condensed milk)
  • கால் கப் பால் பவுடர்
  • 2 ஏலக்காய்
  • பிஸ்தா மற்றும் பாதாம்
  • தேவையான அளவு சர்க்கரை
  • தண்ணீர்
  • மாம்பழ கூழ் (Mango Pulp)
  • பால் பவுடர் 1 கப்
  • மில்க் மெய்ட் 1 கப்
  • வெட்டி வைத்த பிஸ்தா 
  • வெட்டி வைத்த பாதாம்

செய்முறை:

  1. அரை கப் தண்ணீரை நான் ஸ்டிக் தவாவில் காய வையுங்கள்
  2. தண்ணிர் காய்ந்த பிறகு பால் பவுடரை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டேயிருங்கள்
  3. அதன் பிறகு, மில்க் மெய்டை கலந்து நன்கு கிளருங்கள்.
  4. மேற்கூறியதை எல்லாம் நன்கு கிளறிய பிறகு, மாம்பழ கூழை போட்டு கிளறுங்கள்.
  5. இதையடுத்து, இப்படியே 1 நிமிடத்திற்கு கிளறவும்.
  6. ஒரு நிமிடத்திற்கு பிறகு, அடுப்பிலிருந்து கடாயை இறக்குங்கள். 
  7. அதை, நன்கு ஆர வைத்து குல்ஃபி கப் அல்லது ஒரு டம்ளரில் ஊற்றி வையுங்கள்.
  8. ஊற்றி வைத்த அந்த மாம்பழ குல்ஃபியை ஒரு நாள் முழுவதும் ஃப்ரீஸரில் வையுங்கள். 
  9. ஒரு நாள் ஆன பிறகு, அதை குளிர்சாதன பெட்டியிலிருந்த எடுத்து, வெட்டி வைத்த பிஸ்தா மற்றும் பாதாமை தூவிவிடுங்கள். 
  10. இதை அப்படியே எடுத்து சாப்பிட்டீர்களென்றால், குளுகுளு சுவையான மாம்பழ குல்ஃபி ரெடி. 

மேலும் படிக்க | Travel Tips: “மறக்காதீங்க..வருத்தப்படுவீங்க..” சுற்றுலா செல்கையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Kulfi Recipes

மலாய் குல்ஃபி:

பெரியவர்களையும் குழந்தையாக்கும் ஒரு சக்தி, இந்த குல்ஃபிக்களுக்கு உண்டு. அதிலும் படு ஜோரான மலாய் குல்ஃபி குறித்து கூறவே வேண்டாம். இரவில் மணியடித்துக்கொண்டு வந்தால்கூட குல்ஃபி வாங்கி சாப்பிட யாரும் தவறுவதில்லை. அப்படிப்பட்ட மலாய் குல்ஃபியை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

தேவையான பொருட்கள்:

திக்கான பால் 2 கப்
சர்க்கரை அரை கப்
சோள மாவு-1 ஸ்பூன்
பாதாம்
பிஸ்தா
முந்திரி
ஏலக்காய் 3

செய்முறை:

  1. பாலை பாத்திரத்தில் ஊற்றி மீடியம் சூட்டில் வைத்து நன்கு காய்ச்சவும்.
  2. அந்த பால் பாதியாகும் வரை காய்ச்சவும்.
  3. சிறிய கப்பில் ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவை கொட்டி அதனுடன் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. 10 பாதாம் கொட்டைகள், 10 முந்திரி, 2 ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. பாலில் அரை கப் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
  6. பாலை நன்கு கிளறிய பிறகு அரைத்து வைத்த பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் இருந்து இறக்கி அதை குளிர விடவும். 
  8. அது ஆறிய பிறகு, ஐஸ் கிரீம் கப் அல்லது டீ டம்ளரில் ஊற்றி குளிர் சாதன பெட்டியின் ஃப்ரீஸரில் வைக்கவும்.
  9. இதை 8 முதல் 10 மணி நேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். 
  10. இதனுடன் ஐஸ் கிரீம் குச்சியை சொறுகி சாப்பிட்டால் குல்ஃபி ரெடி. 

மேலும் படிக்க | ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News