இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு சக்தி வரை! கருப்பு பூண்டின் மேஜிக் மகிமைகள்!

Health Benefits of Black Garlic: கருப்பு பூண்டினை பலர் சமையலில் உபயோகப்படுத்துவதுண்டு. இதன் மருத்துவ மகிமைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

Written by - Yuvashree | Last Updated : Dec 23, 2023, 04:13 PM IST
  • கருப்பு பூண்டில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
  • இதயத்தை பாதுகாக்க உதவும்
  • இதை சாஸ்களில் உபயோகிக்கலாம்
இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு சக்தி வரை! கருப்பு பூண்டின் மேஜிக் மகிமைகள்! title=

கருப்பு பூண்டும் சாதாரணமான பூண்டுதான். இந்த பூண்டின் சுவை சிறிதளவு புளிப்பாக இருக்கும். சாதாரண பூண்டை பதப்படுத்தினால் கருப்பு பூண்டாக மாறிவிடும். இது, பூண்டின் சுவையை மாற்றுதற்காக உபயோகப்படுத்தப்படும்  செயல்முறையாகும். இந்த பூண்டின், பல மருத்துவ நலன்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், கருப்பு பூண்டை எப்படி நமது தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது:

கருப்பு பூண்டில் உள்ள மகத்துவங்களுள் ஒன்று, இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் குண நலன்கள் நிறைந்துள்ளது. சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை கருப்பு பூண்டு சீர் செய்ய உதவுகிறது. சாதரணமாகவே, பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து உள்ளது. அதிலும், கருப்பு பூண்டில் உடலுக்கு நலன் தரும் சத்துக்களை ஆதரிக்கும் பங்கும் அதிகமாக இருக்கின்றன. 

அழற்சி எதிர்ப்பு:

கருப்பு பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட சில நற்பண்புகள் உள்ளன. பொதுவான ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், குடல்  வீக்கத்தைக் குறைக்கவும் கருப்பு பூண்டினை உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யவும் கருப்பு பூண்டினை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மேலும் படிக்க | 2023 முடிவதற்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பாக செய்து விடுங்கள்!

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்:

கருப்பு பூண்டில் இருக்கும் சத்துக்கள், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், கருப்பு பூண்டு உடலில் இருக்கும் அதிக கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனால், பலர் கருப்பு பூண்டினை தங்களது டயட்டில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். 

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது:

கருப்பு பூண்டில் புற்று நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த சரியான மருத்துவ ஆய்வுகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களை வைத்து இந்த ஆராய்ச்சிகள் இன்னும் நடத்தப்படாமல் இருப்பதால் இன்றளவும் சரியான முடிவுகள் தெரியவில்லை. 

கருப்பு பூண்டை உங்களது டயட்டில் எப்படி சேர்ப்பது?

கருப்பு பூண்டின் சுவை மற்றும் இனிப்பு பண்புகளை கொண்டது. இதனை, இறைச்சிகள் மற்றும் சாஸ்களின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படலாம். புதிய பூண்டுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கும் சமையல் குறிப்புகளில் கருப்பு பூண்டைச் சேர்க்கவும். இது உப்பு மற்றும் இனிப்பு சுவை இரண்டையும் நன்றாக பூர்த்தி செய்ய உதவுகிறது. கருப்பு பூண்டு கடிக்கவும் கூட மென்மையாகவே இருக்கும்.  மேலும், இது நன்கு மெல்லும் உணர்வைக் கொண்டுள்ளது. கருப்பு பூண்டை பிரட் டோஸ்ட் அல்லது சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். 

மேலும் படிக்க | ‘இப்படி’ வாக்கிங் செய்து பாருங்கள்! சுகர் லெவல் சர்ரென இறங்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News