இன்று முதல் LPG Cylinder விலை அதிகரித்தது: உங்கள் ஊரின் விலை விவரம் இதோ

வீட்டு உபயோக எரிவாயு LPG சிலிண்டர்களின் விலை ரூ .25 அதிகரித்த பின்னர், டெல்லியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ .719 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல், அதாவது பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2021, 12:33 PM IST
  • வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 2 ஆம் தேதி LPG சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
  • டிசம்பர் 15 அன்று 50 ரூபாய் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இன்று முதல் LPG Cylinder விலை அதிகரித்தது: உங்கள் ஊரின் விலை விவரம் இதோ title=

புதுடில்லி: சாமானியர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை அவ்வப்போது எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீண்டும் வீட்டு சமையல் எரிவாயுவின் (LPG சிலிண்டர்கள்) விலை அதிகரித்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் LPG சிலிண்டர்களின் விலையை வெளியிட்டுள்ளன.

வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .25 அதிகரிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்களின் விலை ஆறு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வணிக LPG சிலிண்டர்களின் (LPG Cylinder) விலை (19 கிலோ) சிலிண்டருக்கு 190 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.

LPG சிலிண்டரின் தற்போதைய விலை என்ன?

வீட்டு உபயோக எரிவாயு (LPG சிலிண்டர்களின்) விலை ரூ .25 அதிகரித்த பின்னர், டெல்லியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ .719 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல், அதாவது பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. டிசம்பரில் IOC, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை இரு முறை அதிகரித்தது என்பது குறிப்பிடத்டக்கது. டிசம்பர் 2 ஆம் தேதி LPG சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 15 அன்று 50 ரூபாய் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

நகரம் விலை (ரூபாய்)
சென்னை 735.00
டெல்லி 719.00
மும்பை 719.00
கொல்கத்தா 745.50

ALSO READ: Recruitment 2021: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் 185 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

பிப்ரவரி 1 அன்று வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ .190 உயர்த்தப்பட்டது

முன்னதாக, பிப்ரவரி 1 ஆம் தேதி, வர்த்தக பயன்பாட்டு LPG சிலிண்டரின் (19 கிலோ) விலை சிலிண்டருக்கு ரூ .190 உயர்த்தப்பட்டது. இப்போது அது ரூ .6 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வணிக சிலிண்டரின் விலை ரூ .1533 ஆகும். வர்த்தக சிலிண்டரின் விலை மும்பையில் ரூ .1482.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ .1598.50 ஆகவும், சென்னையில் ரூ .1649 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உங்கள் நகரின் LPG விலையை இந்த வழியில் காணலாம்

நீங்கள் விரும்பினால், உங்கள் நகரத்தில் எரிவாயு சிலிண்டரின் வீதத்தை நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம். சமையல் எரிவாயு LPG சிலிண்டரின் விலையை அறிய, நீங்கள் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இங்குள்ள நிறுவனங்கள் சமீபத்திய கட்டணங்களை வழங்குகின்றன. https://iocl.com/Products/IndaneGas.aspx என்ற இந்த இணைப்பில் உங்கள் நகரத்தின் LPG எரிவாயு சிலிண்டரின் விலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு jackpot, LTC Cash Voucher-ல் இனி No Tax!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News