எல்ஐசி ஐபிஓ வெளியீட்டு தேதி: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல்ஐசி) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓ மே 4 அன்று பொது வெளியீட்டுக்கு திறக்கப்பட்டு மே 9, 2022 அன்று நிறைவடையும். இந்த ஐபிஓ மூலம் அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) 3.5 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்கும். இதன் மூலம் அரசாங்க கருவூலத்துக்கு ரூ.21,000 கோடி கிடைக்கும்.
ஐபிஓவில் எல்ஐசியின் மதிப்பு 6 லட்சம் கோடி
ஐபிஓ-வில் எல்ஐசியின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், எல்ஐசியின் ஐபிஓவை தொடங்க நிதி அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. எனினும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
The much-awaited initial public offering of the Life Insurance Corporation of India is likely to open on May 4: Sources privy to the development told ANI
— ANI (@ANI) April 25, 2022
இதையடுத்து எல்ஐசியின் ஐபிஓ வெளியீட்டு தேதி குறித்து பல வித ஊகங்கள் சந்தையில் பரவத் தொடங்கின. இது பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு மிகப்பெரிய ஐபிஓ என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும்
எல்ஐசி ஐபிஓ தொடர்பாக எல்ஐசி வாரியம் செவ்வாய்க்கிழமை முக்கியக் கூட்டத்தை நடத்த உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளியீட்டு தேதி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படலாம்.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்
முன்னதாக எல்ஐசியில் 5% பங்குகளை விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம் ஐபிஓ-க்கு 3.5% பங்குகளை மட்டுமே வழங்குகிறது. சந்தையில் இதற்கான தேவை நன்றாக இருந்தால், அரசாங்கம் இந்த பங்கீட்டை 5% ஆக அதிகரிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரியில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன
பிப்ரவரியில் எல்ஐசியின் வரைவுத் தாள்களை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) அரசாங்கம் தாக்கல் செய்தது. 12 டிரில்லியன் சந்தை மதிப்பில் சுமார் 65,000 கோடி ரூபாய் திரட்டுவது இலக்காக இருந்தது. ஏனெனில் அப்போது 5% பங்குகளை சந்தையில் வெளியிடுவதற்கான எண்ணம் இருந்தது.
தற்போதைய தொகையான ரூ.21,000 கோடி ஐபிஓ-வும் இதுவரை இல்லாத மிகப் பெரிய ஐபிஒ ஆக இருக்கும். பேடிஎம்-இன் ரூ.18,300 கோடி சாதனையை எல்ஐசி ஐபிஓ முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | LIC IPO: இதில் முதலீடு செய்ய அனைவரும் காத்திருக்கும் காரணம் என்ன? விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR