சென்னை: தமிழகத்தில் இது கனமழை பெய்யும் காலமாக உள்ளது. இந்த ஆண்டு பருவமழையினால் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் தன்ணீரின் அளவு அபரிதமாக இருக்கிறது.
பல ஆண்டுகளில் மழை குறைவாக பெய்வதும், கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு (Water Scarcity) ஏற்படுவதும் என இயற்கை ஆண்டுக்காண்டு தனது அவதாரத்தை மாற்றிக் கொள்கிறது.
மழையோ, வறட்சியோ, தண்ணீர் இல்லாமல் உலகமே இயங்க முடியாது. எல்லாவற்றையும் அளப்பது போன்று தண்ணீரும் பலவித அளவுகோள்களால் அளவிடப்படுகிறது. குறைந்தபட்சம் மில்லி லிட்டர் என்பது முதல் டிஎம்சி (tmc) என்பது வரை பல அளவீடுகளை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
அதிலும், நீர் வரத்து, நீர் திறந்துவிடுவது என்ற தகவல்களில் டி.எம்.சி என்ற பதம் பயன்படுத்தப்படும். ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் என்பதன் சுருக்கமாகும் (Thousand million cubic). அதாவது ஒரு டிஎம்சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். இதைத்தான் சுருக்கமாக டிஎம்சி என்று கூறி வருகிறோம்.
Read Also | செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 2000 கன அடியாக உயர்வு
1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீர் ஆகும். அதாவது ஒரு டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர் (measurement of water). 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 24 லட்சம் லாரிகளில் தான் ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும்.
தற்போது பெய்து வரும் பருவமழையின்போது, பல டிஎம்சி தண்ணீர் வீணாகிவருகிறது.ஆண்டுக்கு 100 முதல் 400 tmc மழைநீர் கடலில் கலக்கிறது. இது "விழலுக்கு இறைத்த நீர்" என்றும் சொல்லலாம். கடலுக்குள் தானே நீர் செல்கிறது அது எப்படி வீணாகிறது என்று கேள்வி எழுகிறதா?
பொதுவாக நொடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. பூமியில் 71% தண்ணீர் தான் இருக்கிறது என்றாலும், அதில், 97.5% உப்பு நீர் தான் இருக்கிறது. கடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் நாம் அதை குடிக்க முடியாது.
கடல் நீரை சுத்தீகரிப்பது கடினம், அதிக செலவு பிடிக்கும் செயல்முறை. ஆனால், கடலில் சென்று கலக்கும் ஒரு டிஎம்சி நீரை தடுத்து சேமித்தால், அதில் பல ஏரிகளை நிரப்பலாம். சென்னை முழுவதற்கும் சேர்த்து ஓராண்டு குடிநீருக்கு 12 டிஎம்சி நீர் இருந்தால் போதுமாம்!
ALSO READ | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR