Income Tax Rules: ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!!

புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்க உள்ள நிலையில், அன்று முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். அது குறித்து முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2022, 11:12 AM IST
  • வருமான வரி விதிகள் மாறுகின்றன.
  • ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாறும்.
  • வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்.
Income Tax Rules: ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! title=

ஏப்ரல் 1, 2022 முதல் புதிய நிதியாண்டு தொடங்கும், இந்த நாளில் இருந்து பல பெரிய விதிகள் மாற்றப்படும். வருமான வரி மற்றும் வங்கி தொடர்பான முக்கிய விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறுகின்றன. 

கிரிப்டோ சொத்துகளின் மீதான வருமான வரி, EPFக்கான புதிய வரி விதிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சைக்கான வரி விலக்கு என பல விஷயங்கள் மாறுகின்றன. இந்த முக்கிய மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கிரிப்டோ மூலம் வருமானம் மீதான வரி

கிரிப்டோகரன்சிகளின் வருமானத்திற்கு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும். நிதியாண்டின் தொடக்கத்தில், கிரிப்டோ மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரியும், 2022 ஜூலை 1 முதல் TDS 1 சதவீதமும் பொருந்தும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை தாக்கல் செய்த பட்ஜெட்டில் கிரிப்டோ சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். 

இதன்படி, I-T சட்டத்தின் கீழ் தணிக்கை செய்யப்பட்ட தனிநபர்கள் / HUF களுக்கு, அவர்களுக்கான TDS வரம்பு ஆண்டுக்கு 50,000 ரூபாயாக இருக்கும். கிரிப்டோவில்  கிடைக்கும் வருமானத்திற்கு, அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் டிஜிட்டல் சொத்தில் நஷ்டம் ஏற்பட்டால், அந்த இழப்பை அவரது வருமானத்துடன் ஈடுகட்ட முடியாது.

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் இந்த 10 மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்

புதுப்பிக்கப்பட்ட ITR தாக்கல் செய்யலாம்

ஏப்ரல் 1ஆம் தேதி அதாவது புதிய நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோருக்கு சிறப்பு வசதி அளிக்கப்படுகிறது. இதன் கீழ், ஏதேனும் தவறான தகவல் பதியப்பட்டு இருந்தால்,  தவறை சரிசெய்து மீண்டும் ITR படிவத்தை நிரப்ப விரும்பினால், நீங்கள் அதை நிரப்பலாம். அதாவது, வரி செலுத்துவோர் இப்போது 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் தொடர்புடைய மதிப்பீட்டின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம்.

ஊழியர்களுக்கு NPS விலக்கு

மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வசதிகள் வழங்கப்படும். பணியாளர்கள் இப்போது, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின்  14% வரையிலான NPS பங்களிப்பிற்கு  80CCD(2) பிரிவின் கீழ் விலக்கு பெற முடியும்.  மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லா மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த விதி பொருந்தும். தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில்  ஓய்வூதிய பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்துவதற்கான மாற்றம் 2019 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News