வங்கிகளை விட அதிக வட்டி அளிக்கும் அசத்தலான சேமிப்புத் திட்டங்கள்: முழு பட்டியல் இதோ

Saving Schemes: இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 1, 2023, 06:27 PM IST
  • தற்போது, தேசிய சேமிப்பு பத்திரம் 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
  • என்எஸ்சியில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
  • இதில் குறைந்தபட்ச முதலீடு 100 ரூபாய் ஆகும்.
வங்கிகளை விட அதிக வட்டி அளிக்கும் அசத்தலான சேமிப்புத் திட்டங்கள்: முழு பட்டியல் இதோ title=

வங்கி எஃப்டி-களை விட அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்: நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் எண்ணத்தில் உள்ளீர்களா? ஆனால், அதிக ரிஸ்க் எடுக்க தயக்கம் உள்ளதா? அப்படியென்றால், வங்கிகளின் நிலையான வைப்புகளை (எஃப்டி-கள்) தவிர்த்து, உங்கள் பணத்தை போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இலாபகரமான வட்டி விகிதத்தைத் தவிர, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் வரி விலக்கின் இரட்டைச் சலுகையை வழங்குகிறது.

இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.

ஏப்ரலில் சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, இந்த திட்டங்களில் சில, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ (ICICI), எஹ்டிஎஃப்சி ( HDFC), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB) உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைகளில் (FDs) வழங்கப்படும் வட்டியை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 

இந்த இரண்டு திட்டங்களிலும் 8% -க்கும் அதிகமான வட்டி விகிதம் கிடைக்கும்

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகியவை இந்த வைப்புத்தொகைகளுக்கு 8% க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது இந்திய அரசின் ஆதரவு பெற்ற சிறு சேமிப்புத் திட்டமாகும். இது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தையின் நீண்ட கால நிதித் தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க உதவுகிறது. SSY திட்டத்தில், இந்திய அரசு SSY -க்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து அதிக வட்டி விகிதத்தைப் பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) 8.2% வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

தேசிய சேமிப்புச் பத்திரம் (NSC)

தற்போது, தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. என்எஸ்சியில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை, இதில் குறைந்தபட்ச முதலீடு 100 ரூபாய் ஆகும். ஒரு நிதியாண்டில் என்எஸ்சி -யில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்கள் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்குக்குத் தகுதி பெறும்.

மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ அதிரடியாக அதிகரிக்கும்

தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம்

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD -கள்) போலவே, தபால் அலுவலகமும் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு கால வைப்புகளை வழங்குகிறது. 5 ஆண்டு கால அஞ்சலக வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். தற்போது, 5 ஆண்டு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டத்தில் 7.5% வட்டி கிடைக்கிறது.

சமீபத்திய வங்கி எஃப்டி விகிதங்களின் கணக்கீடு: SBI vs Axis vs HDFC vs ICICI vs PNB vs BoB

- எஸ்பிஐ - இன் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்-3.00%-7.10% p.a. - பொது மக்களுக்கு

- எச்டிஎஃப்சி வங்கியின் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்- 3% முதல் 7.1% p.a. - பொது மக்களுக்கு

- ஐசிஐசிஐ வங்கியின் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்- 3% முதல் 7.1% p.a. - பொது மக்களுக்கு

- ஆக்சிஸ் வங்கியின் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்- 3.5% முதல் 7.1% p.a. - பொது மக்களுக்கு

- பஞ்சாப் நேஷனல் வங்கியின் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்- 3.5% முதல் 7.25% p.a. - பொது மக்களுக்கு

- பாங்க் ஆஃப் பரோடாவின் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்- 3% முதல் 7.25% p.a. - பொது மக்களுக்கு

மேலும் படிக்க | FD பணம் போடுவதை விட அதிக லாபத்தை கொடுக்கும் அரசு திட்டங்கள் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News