ஐடிஆர் முதல் பான்-ஆதார் இணைப்பு வரை அனைத்துமே: மார்ச் 2022 இறுதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், பல முக்கியமான வேலைகள் உள்ளன, அதன் கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆகும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தப் பணிகளை முடிக்காவிட்டால், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இம்மாதத்தின் கடைசித் தேதிக்குள் தீர்வு காண வேண்டிய பணிகள் என்ன என்பதை எங்களுக்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐடிஆர் தாக்கல்
கடந்த 2021 - 2022ம் ஆண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடுவானது மார்ச் 31, 2022 ஆகும். இதே 2020 - 21 நிதியாண்டிற்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 31, 2021 ஆகும். ஆனால் வருமான வரி தாக்கல் செய்வோர் தாமதமாக தாக்கல் செய்திருந்தால், அவர் அதனை மார்ச் 31, 2022க்குள் திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பணவரவு, மகிழ்ச்சி பொங்க வீட்டில் எந்த சிலைகளை வைக்க வேண்டும்?
பான்-ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி
ஆதார் பான் இணைப்புக்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும். என்வே பான் ஆதார் இணைப்பு செய்யாதவர்கள் அதற்குள் செய்து கொள்ளலாம். ஓரு வேளை நீங்கள் அப்டேட் செய்யாவிட்டால், மார்ச் 31க்கு பிறகு உங்களது பான் கார்டு செயலற்று போகலாம். அது மட்டும் அல்ல 272பி பிரிவின் கீழ்10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். வங்கி வைப்பு நிதிகளுக்கு கிடைக்கும் வட்டிக்கான டிடிஎஸ் விகிதமும் இரட்டிப்பாகலாம்.
கேஒய்சி அப்டேட்
வங்கிகளில் கேஒய்சி ஆவணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும். முன்னதாக இதனை அப்டேட் செய்ய டிசம்பர் 31,2021 காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தது. ஆனால் ஓமிக்ரான் அச்சம் காரணமாக மார்ச் 31, 2022 வரையில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
வரி சேமிப்பு முதலீடுகள்
சிலர் தங்களது சேமிப்பு மூலம் வரிச் சலுகையை பெறவே சில முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வர். நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அப்படி ஏதும் திட்டமிட்டிருந்தால், முதலீடு செய்துள்ளீர்களா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். எனினும் இந்த திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் செய்யப்படுவதால் அவசரப்படாமல், நிதானமாக முடிவு செய்வது நல்லது.
பி.எம் கிசான் கேஒய்சி அப்டேட்
பி.எம் கிசான் இல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மக்களும் இ-கேஒய்சி செய்ய வேண்டியது அவசியமாகிவிட்டது. இ-கேஒய்சிக்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆகும். குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகள் இப்பணியைச் செய்யாவிட்டால், அடுத்த தவணை கிடைக்காமல் போகலாம்.
பிபிஎஃப் மற்றும் என்.பி.எஸ் போன்ற கணக்குகளில் குறைந்தபட்ச கட்டணம்
நீங்கள் பிபிஎஃப் மற்றும் என்.பி.எஸ் போன்ற கணக்குகளில் முதலீடு செய்தால், நீங்கள் குறைந்தபட்ச முதலீடு செய்தீர்களா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இல்லையெனில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதைச் செய்யுங்கள், ஏனென்றால் அதற்குப் பிறகு நீங்கள் அபராதத்துடன் செலுத்த வேண்டி இருக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR