Bharat Gaurav Train: சிவபக்தர்களுக்கான ரயில்வேயின் சிறப்பு முன்னெடுப்பு... ஜோதிர்லிங்க யாத்திரைக்கு ரெடியா!

IRCTC Bharat Gaurav Tour: நாட்டில் அமைந்துள்ள பல்வேறு ஜோதிர்லிங்கங்களை தரிசிப்பவர்களுக்கு IRCTC இந்த பொன்னான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த பயண தொகுப்பு மற்றும் அதன் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 4, 2023, 11:43 AM IST
  • இந்த பயணம் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கும்.
  • இந்த பயண பேக்கேஜ் மொத்தம் 10 பகல் மற்றும் 9 இரவுகளை உள்ளடக்கியதாகும்.
  • IRCTC இந்த ஜோதிர்லிங்க பயண தொகுப்பை மூன்று வகுப்புகளாக பிரித்துள்ளது.
Bharat Gaurav Train: சிவபக்தர்களுக்கான ரயில்வேயின் சிறப்பு முன்னெடுப்பு... ஜோதிர்லிங்க யாத்திரைக்கு ரெடியா! title=

IRCTC Bharat Gaurav Tour Package: கோடை விடுமுறை நாள்கள் தற்போது நடந்து வருகிறது. இந்த விடுமுறையைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு ஆன்மீக ஸ்தலத்திற்குச் செல்ல விரும்பினால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. 

ஆம், இந்திய இரயில்வே சிவன் பக்தர்களுக்காக பிரமாண்டமான சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் அமைந்துள்ள பல்வேறு ஜோதிர்லிங்கங்களை தரிசிப்பவர்களுக்கு IRCTC இந்த பொன்னான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த பயண தொகுப்பு மற்றும் அதன் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிர்லிங்க யாத்திரை

IRCTC பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் மூலம் சிறப்பு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. ஜோதிர்லிங்க யாத்திரை பேக்கேஜில், துவாரகாதீஷ் கோவிலுக்கு பயணிக்க படகும் வழங்கப்படும். கோரக்பூரில் இருந்து பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்கு முன்பதிவு செய்ய IRCTC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை irctctourism.com பார்வையிட வேண்டும்.

மேலும் படிக்க | IRCTC Tour Package: வெறும் 8000 ரூபாயில் 5 நாட்கள் ஊட்டியை சுற்றி பார்க்கலாம்!

ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க...

இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்த ஜோதிர்லிங்க யாத்திரை தொகுப்பு மொத்தம் 10 பகல் மற்றும் 9 இரவுகளை உள்ளடக்கியதாகும். இதில், நாட்டில் இருக்கும் ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம், சோம்நாத் ஜோதிர்லிங்கம், துவாரகாதீஷ் கோயில், நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம், பேட் துவாரகா, திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம், கிருஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கம், பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் ஆகியவை இதில் அடங்கும்.

வழங்கப்படும் வசதிகள்

IRCTC இந்த ஜோதிர்லிங்க பயண தொகுப்பை மூன்று வகுப்புகளாக பிரித்துள்ளது. முதல் பொருளாதார வகுப்பு, இரண்டாம் தர வகுப்பு மற்றும் மூன்றாம் தர வகுப்பு. இந்த மூன்று வகுப்புகளிலும், உங்களுக்கு வெவ்வேறு கட்டணங்களுக்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படும். அனைத்து வகுப்புகளிலும், உணவுடன், ஓட்டல் தங்கும் வசதி, எங்கும் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

எவ்வளவு செலவாகும்?

IRCTC இன் இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் ஜோதிர்லிங்க யாத்ரா பயண தொகுப்பின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பில் ஒரு நபருக்கு ரூ.18,466, 3 ஏசி வகுப்பில் ஒரு வகுப்பிற்கு ரூ. 30,668, 2 ஏசிக்கு ஒரு நபருக்கு ரூ.40,603 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ரயில் ஆபத்தில் இருந்தால் இப்படிதான் சத்தம் வரும்... 11 வகையான ரயில் ஹாரன்களை தெரிஞ்சிக்கோங்க!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News