உலக நாய்கள் தினம்: நாய் வளர்த்தால் வாழ்வில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா..?

International Dog Day 2023: இன்று, உலக நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டடி, நாய் வளர்த்தால் நம் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா..?  

Written by - Yuvashree | Last Updated : Aug 26, 2023, 12:31 PM IST
  • இன்று சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • நாய் வளர்ப்பதால் மனநலனில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
  • நம் வாழ்வில் நம்மை அறியாமலேயே நாய்கள் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
உலக நாய்கள் தினம்: நாய் வளர்த்தால் வாழ்வில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா..? title=

‘என் நெஞ்சை தீண்டினாயே..என் வாழ்வை நீ மாற்றினாய்..” என்று நாய்க்காக பாடல் எழுதியவர்கள், நம்ம ஊர் சினிமா துறையினர். அந்த பாடல் வரிகளை போலவே, நம் வாழ்வை மாற்றக்கூடிய சக்தி நாய்களுக்கு உண்டு.

உலக நாய்கள் தினம்:

ஆகஸ்டு 26ஆம் தேதியான இன்று, சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே உள்ள மகத்தான், அழகான உறவை வெளிகொண்டு வரும் நோக்கில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாய்கள் நம் வாழ்வை பல வகைகளில் மாற்றி அமைக்கின்றன. தனியாக இருப்பவர்களுக்கு தோழமையை பயிற்று விக்கும் நாய்கள், பலரது மன நலனையும் மேன்மை படுத்தவும் உதவுகிறது. இதை தோழன் அல்லது தோழியாக, ஒரு ரூம் மேட்டாக, தங்களது மன ஆற்றாமைகளை பகிர்ந்து கொள்ளும் உறவாக என பல வகைகளில் மனிதர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

நாய் வளர்ப்பதால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்..

>நாய்கள், தங்களது காப்பாளர்களை ஆக்டிவாக வைத்திருக்க உதவுகிறது. நாய்களுக்கு எவ்வளவு வயதானாலும் அது குழந்தைதான். உட்கார, நிற்க, ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொடுக்க நாய்களை பழக்கலாம். ஆனால், அதற்கான அன்றாட வேலைகளை நாம்தான் செய்ய வேண்டும், சோம்பலாக இருக்கும் நேரங்களில், வளர்ப்பு நாய்களுக்கான தேவைகள்தான் நம்மை எழுந்து நடமாட செய்யும். 

>நாய் வளர்ப்பது மன நலனிற்கு மிகவும் நல்லது என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தில் இருப்போர், பதற்றத்தினால்  (anxiety) பாதிக்கப்படுவோர் நாய்கள் அருகாமையில் இருந்தால் அதிலிருந்து மீள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 

>நாய் வளர்ப்பவர்களுக்கு என்று தினசரி செயல்பாடுகள் சில இருக்கும். நாயை நடைப்பயிற்சிக்கு கூட்டிக்கொண்டு போவது, சிறுநீர் கழிக்க வெளியில் கொண்டு செல்வது, விளையாட பார்கிற்கு அழைத்து செல்வது போன்ற விஷயங்கள் நாய்க்கும் நல்லது நாயை வளர்ப்பவருக்கும் நல்லது. இது தினசரி பழக்கமாக மாறுவதால் நம் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். 

மேலும் படிக்க | ஹார்ட் பிராப்ளம் இருக்கா? மக்கர் செய்வதற்கு முன்னதாக இதயம் இந்த அறிகுறிகளை காட்டும்

>பிறரிடம் பேச பயப்படுபர்கள் கூட, தனது நாயினால் அந்த பயத்தை விட்டு வெளியில் வந்துள்ளனர். சிலர், சமூகத்தில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு நடமாட தங்களுக்கு நாய்கள் உதவியுள்ளதாக கூறுகின்றனர். 

>நாய் வளர்ப்பவர்கள் பலர், தற்கொலை எண்ணங்களில் இருந்து மீண்டுள்ளதாக கூறுகின்றனர். நமக்கென யாரும் இல்லையே என்ற ஏக்கம் பலரை வாட்டி வதைத்திருக்கும், இதை மாற்றியமைக்கும் சக்தி வளர்ப்பு நாய்களுக்கு உள்ளது. வாழ்க்கையின் அழகான மற்றும் ஆழமான படிப்பினையை நாய்கள் தங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளதாக நாய் வளர்க்கும் சிலர் கூறுகின்றனர். 

நாய் வளர்க்க பலருக்கு ஆசை..ஆனால்..

நாய்களை வளர்க்க பலருக்கு ஆசை உண்டு. ஆனால், பலர் நாய் குட்டியாக இருக்கும் போது அதை வீட்டிற்கு தூக்கி எடுத்து வந்து, அது காெஞ்சம் வளர்ந்த உடன் எங்காவது கொண்டு போய் விட்டுவிடுவர். அப்படி செய்வது, மனித நேயமற்ற செயல் என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள். நாய் வளர்ப்பது கடினமான வேலை இல்லை என்றாலும், சில சமயங்களில் கடினமாக தோன்றும். “எனக்கான வேலைகளையும் செய்து கொண்டு நாயையும் பார்த்துக்கொள்ள வேண்டுமா..”என்று யோசிப்பவர்களுக்கு கண்டிப்பாக நாய் வளர்ப்பது ஒத்து வராது. ஆனால், உண்மையாகவே வாயற்ற ஜீவனை தனக்கு துணையாக வைத்துக்காெள்ள நினைப்பவர்கள் நாய்களை வளர்க்கலாம். நாயை வாங்கிய பிறகு சிலர் குடும்பத்தினருக்கு அலர்ஜி ஏற்பட்டால் அதை ரோட்டில் அனாதையாக விட்டுவிடுவர். நாய்களை இவ்வாறு தனியாக கண்காணாத இடத்தில் கொண்டு போய் விடுவதை தவிர்க்க வேண்டும். 

நாய் இனி வேண்டாம் என்று நினைத்தால் முதலில் உங்கள் சுற்றத்தார் அல்லது நண்பர்களில் யாராவது ஒருவரால் வளர்க்க முடியுமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படி யாரும் முன்வராத பட்சத்தில் வாயில்லா பிராணிகளை பராமரிக்கும் இடங்கிளில் உங்கள் நாயினை விட்டு விடலாம். 

மேலும் படிக்க | ஆசைக்கும் அளவிருக்கு! அழகா இருக்க ‘இதை’ எப்ப வேணுன்னாலும் சாப்பிடக்கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News