WOW... இனி விண்வெளிக்கு டூர் என்ன; ஹனி மூனே போகலாம்..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைமையகம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2018, 11:29 AM IST
WOW... இனி விண்வெளிக்கு டூர் என்ன; ஹனி மூனே போகலாம்.. title=

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைமையகம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது..! 

இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திவருகிறது. இந்நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதகாக சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ பெரும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன் யான் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதற்கு இடையில் ஜம்முவில் சிதியாலர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், விண்வெளி சுற்றுலா என்பது விரைவில் சாத்தியமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதற்கான வாய்ப்புகளை இஸ்ரோ ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், 2022 ஆம் ஆண்டுக்குள் இது சாத்தியமாகும் என்றார்.

இந்திய சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டுவிழா 2022 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் போது, ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதையும் சிவன் குறிப்பிட்டிருந்தார். மேலும், விண்வெளி சுற்றுலா குறித்த யோசனைகளை ஊக்குவிப்பதன் மூலம், அது ஒரு வளர்ந்து வரும் யோசனை என்றும் அவர் தெரிவித்தார். "நாங்கள் அதற்கான திறனை உருவாக்கி வருகிறோம், அதனால் நாம் பின்வாங்க மாட்டோம்," என தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மத்திய பல்கலைக்கழக ஜம்மு (CUJ) மையத்தில் ஒரு மையத்தை அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

Trending News